நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: கூடவே தள்ளுபடி வழங்கி அதிரவைத்த Redmi.!

|

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஜனவரி 11..

ஜனவரி 11..

அதேபோல் இந்த மூன்று ரெட்மி போன்களும் வரும் ஜனவரி 11-ம் தேதி மி.காம், அமேசான் உள்ளிட்ட முன்னணி தளங்களில் விற்பனைக்கு வருகின்றன. எனவே இந்த பொங்கல் பண்டிகைக்கு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது. இப்போது இந்த மூன்று போன்களின் விலை அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி

 • டிஸ்பிளே: 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டி பிளஸ் ஆதரவு
 • சிப்செட்: மீடியாடெக் Dimensity 1080
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
 • ட்ரிபிள் ரியர் கேமரா
 • ரியர் கேமரா: 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா
 • செல்பி கேமரா: 16எம்பி
 • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
 • 5ஜி, வைஃபை, ப்ளூடூத்
 • 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ்
 • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
 • 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் ஹாப்டிக்ஸ் மோட்டார் ஆதரவு
 • ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு
 • ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி விலை

  ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி விலை

  8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

  ஜெர்மன் கம்பெனினா சும்மாவா! ஆளுக்கு 2 வாங்கும் விலை! 48Hrs பிளே டைம்; Noise Cancellation உடன் கேமிங் இயர்பட்ஸ்ஜெர்மன் கம்பெனினா சும்மாவா! ஆளுக்கு 2 வாங்கும் விலை! 48Hrs பிளே டைம்; Noise Cancellation உடன் கேமிங் இயர்பட்ஸ்

  ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி

  ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி

  • டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1,080×2,400 பிக்சல்ஸ்)
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டி பிளஸ் ஆதரவு
  • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • சிப்செட்: மீடியாடெக் Dimensity 1080
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
  • ட்ரிபிள் ரியர் கேமரா
  • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா
  • செல்பி கேமரா: 16எம்பி
  • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
  • 5ஜி, வைஃபை, ப்ளூடூத்
  • 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ்
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
  • 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.2
  • 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ்
  • ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு
  • ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி விலை

   ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி விலை

   6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.26,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.27,999-விலையிலும் விற்பனைக்கு வரும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும். பின்பு நீலம், கருப்பு மற்றும் ஊதா நிறங்களில் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 12 5ஜி

   ரெட்மி நோட் 12 5ஜி

   டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1,080×2,400 பிக்சல்ஸ்)
   120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
   1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டி பிளஸ் ஆதரவு
   கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளது
   சிப்செட்: ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1
   இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
   டூயல் ரியர் கேமரா
   ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா
   செல்பி கேமரா: 8எம்பி
   பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
   5ஜி, வைஃபை, ப்ளூடூத்
   3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ்
   பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
   33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
   5ஜி, வைஃபை, ப்ளூடூத் வி5.1
   3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ்
   மோனோ ஸ்பீக்கர் ஆதரவு

   ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் விலை

   ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் விலை

   4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி போனின் விலை ரூ.16,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.18,499-ஆக உள்ளது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 series launched in India: Check Specs, Price and offer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X