Home
Mobile

அடுத்த மாதம் வருகிறது புது Redmi 5ஜி போன்.. 8500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே90 அல்ட்ரா (Redmi K90 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி இந்த புதிய போன் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 2026 இல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக முதலில் ரெட்மி கே90 அல்ட்ரா போன் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி கே90 அல்ட்ரா அம்சங்கள் (Redmi K90 Ultra specification): 6.8-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அடுத்த மாதம் வருகிறது புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனில் 32எம்பி செல்பி கேமரா உள்ளதாக கூறப்படுகிறது.

தரமான டைமன்சிட்டி 9500 பிளாக்ஷிப் (Dimensity 9500 flagship) சிப்செட் உடன் இந்த ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 8500mAh பேட்டரி உடன் ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K90 Ultra India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X