Home
Mobile

வச்சான் பாரு VIVO.. 7200mAh பேட்டரி, 44W சார்ஜிங் உடன் புதிய 5G போன்.. ஸ்பீடு சும்மா பிச்சுக்கும் சிப்செட்!

விவோ (VIVO) நிறுவனம் தனது அடுத்த டி-சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கி உள்ளது. அது விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) மாடல் ஆகும். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே "அடிதடி" நடக்கும் விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது அறிமுகம்?

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள்: பிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் வழியாக பகிரப்பட்டுள்ள டீஸரில், விவோ நிறுவனமானது அதன் விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போனின் பென்ச்மார்க் பெர்ஃபார்மென்ஸை (Benchmark performance) எடுத்துரைக்கிறது. விவோவின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் - ஒரு மில்லியனுக்கும் அதிகமான அன்டுடு (AnTuTu) ஸ்கோரை அடைந்துள்ளது.

வச்சான் பாரு VIVO.. 7200mAh பேட்டரி உடன் புதிய 5G போன்!

ஆனால் விவோ நிறுவனம் இன்னமும் விவோ 5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் அன்டுடு ஸ்கோரை வைத்து பார்க்கும் போது, இதன் விலைப்பிரிவில், இந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாக "உயர்மட்ட செயல்திறனை" (Top-tier performance) வழங்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, விவோ டி5எக்ஸ் 5ஜி ஆனது மீடியாடெக்டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் (MediaTek Dimensity 7400 Turbo) மூலம் இயக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரிஜின்ஓஎஸ் 6 (Origin OS 6) கொண்டு இயங்கலாம்

பேட்டரியை பொறுத்தவரை இது 6,000mAh அல்லது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 7,200mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் என்று லீக்ஸ் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7,200mAh பேட்டரியை பேக் செய்யும் பட்சத்தில், இந்த விலைப்பிரிவில் உள்ள பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது இருக்கும்.

விவோ டி5எக்ஸ் 5ஜி விலை: விவோவின் டீசரில் "மார்ச் 5, 2026 நிலவரப்படி ரூ.23,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் வேகமானது" என்று விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை விவரிக்கும் ஒரு குறிப்பும் உள்ளது. ஆக இந்தியாவில் இது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகும் என்பதை இப்போதே தெரிந்துகொள்ள முடிகிறது.

நினைவூட்டும் வண்ணம் விவோ டி4எக்ஸ் 5ஜி ரூ.13,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக ரூ.25,000 க்குள் என்கிற விலை நிர்ணயமானது, விவோ டி5எக்ஸ் 5ஜி-க்கான கடுமையான விலை உயர்வை பரிந்துரைக்கிறது. இந்த இடத்தில் - விவோ டி4எக்ஸ் 5ஜி மாடலின் விலை தற்போது ரூ.16,999 ஆக உயர்ந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அறிமுகமான விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா

- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30fps இல் 4கே வீடியோ ரெக்கார்டிங்
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,500mAh பேட்டரி
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T5x 5G New Performance Focused Phone India Launch Teased Price Could Under Rs 25000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X