ரூ.13,300க்கு பக்கா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த Oppo: புது 5ஜி போன் வாங்க சரியான நேரம்..

|

ஒப்போ நிறுவனம் Oppo A56s என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட Oppo A56 5G ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் உயர் ரெஃப்ரஷிங் ரேட், டைமன்சிட்டி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடனான பெரிய எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Oppo A56s சிறப்பம்சங்கள்

Oppo A56s சிறப்பம்சங்கள்

Oppo A56s சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் எல்சிடி HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ppi பிக்சல் அடர்த்தி மற்றும் NTSC வண்ண வரம்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. Oppo A56s ஒரு இடைநிலை ஸ்மார்ட்போன் ஆகும். வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவைக் கொண்டிருக்கிறது இதன் டிஸ்ப்ளே.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

Oppo A56s ஸ்மார்ட்போனானது 5ஜி திறன் ஆதரவு கொண்ட ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, Oppo A56s ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஒரு பிரைமரி சென்சார் மற்றும் போர்ட்ரெய்ட் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

ஸ்மார்ட்போனின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து பார்க்கையில், பாதுகாப்பு அம்சத்துக்கு என இதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் சிம், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல இணைப்பு ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

Oppo A56s: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A56s: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo A56s விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1099 (தோராயமாக ரூ.13,300) எனவும் 8 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1299 (தோராயமாக ரூ.15,650) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Oppo A56s ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் ப்ளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக திட்டத்தை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்பட்சத்தில் இதே விலைப்பிரிவை தான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யும்பட்சத்தில் அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Oppo A56s ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக 5ஜி போன் வாங்கத் திட்டமிடும் பலருக்கும் இந்த புதிய ஒப்போ போன் சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Launched a 5G Smartphone For Rs.13,300: Right time to buy a New 5G Phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X