Home
Deal of the day

பொளக்குது விற்பனை.. ரூ.5,599 ஆஃபரில் 200MP கேமரா.. 6200mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ ரெனோ15 5ஜி (OPPO Reno15 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 200 எம்பி ரியர் கேமரா, 6200mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட் கொண்ட இந்த ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.45,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,599 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.40,400 விலைக்கு இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. ரூ.5,599 ஆஃபரில் 200MP கேமரா.. 6200mAh பேட்டரி!

ஓப்போ ரெனோ15 5ஜி அம்சங்கள் (OPPO Reno15 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி720 எம்சி7 ஜிபியு (Mali G720 MC7 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது.

6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், 1.5K ரெசொலுஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளே டிசைனை கொண்டுள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.

மேலும், 3840Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கிடைத்துள்ளது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுத்து உள்ளது. மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. டெலிபோட்டோவுக்கும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.

வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி அவுட்புட் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்படியான பேட்டரி சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரியை இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. டைப்-சி ஆடியோ மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைத்துள்ளது.

கிளாசியர் ஒயிட், அரோரா ப்ளூ மற்றும் ட்வைலைட் ப்ளூ ஆகிய மூன்று கலர்களில் இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno15 5G With 200MP Camera Available At 8 Percent Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X