Just In
- 12 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 15 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 15 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 16 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- News
ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவால் வேதனை.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இப்படி ஒரு 5G போனுக்காக வெயிட் பண்ணலாம் தப்பில்லை: ஒன்பிளஸ் சொன்ன நற்செய்தி.!
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோட் சிஇ 3 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3
தற்போது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
மேலும் 2400 X 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும்.

ஸ்னாப்டிராகன் 695 பிராஸசர்
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது HDR10, HLG ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராஸசர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும். அதேபோல் இதில் Adreno 619 GPU ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

256ஜிபி ஸ்டோரேஜ்
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

108எம்பி பிரைமரி கேமரா
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஏச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

டூயல்-பேண்ட் வைஃபை
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய போன் வெளிவரும். பின்பு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போனின் மாடல் எண் CPH2467 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470