Home
Mobile

Motorola 5ஜி போனை ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி (Motorola G57 Power 5G)ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Motorola 5ஜி போனை ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி அம்சங்கள் (Motorola G57 Power 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒடி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) ஆகிய கேமரா கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Motorola 5ஜி போனை ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

பான்டோன் ரெகாட்டா, பான்டோன் கோர்செயர், PANTONE Fluidity நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6.802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

photo credits: flipkart

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G57 Power 5G with 8GB RAM available at 17 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X