OnePlus 11 அறிமுகம்: இன்னையோட மற்ற பிராண்டுகள் எல்லாம் காலி; பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கானுங்க!

|

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, மற்ற எல்லா ஸ்மார்ட்போன் பிராண்டுகளையும் "காலி" செய்யும் தனது நோக்கத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது - ஒன்பிளஸ் நிறுவனம்!

ஏனென்றால் இன்று, அதாவது 2023 ஜனவரி 4 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நிறுவனம், அதன் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

OnePlus 11 அறிமுகம்: இன்னையோட மற்ற பிராண்டுகள் எல்லாம் காலி!

சரியாக எப்போது அறிமுகம் செய்யும்? ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன், டிஸ்பிளே, சாஃப்ட்வேர், கேமரா, பேட்டரி போன்ற அம்சங்கள் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

டிசைன் மற்றும் டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா டிசைன் ஆனது சற்றே வித்தியாசமாக உள்ளது. சதுர வடிவிலான தோற்றத்தை கொடுத்தாலும் கூட, அது பார்ப்பதற்கு வட்ட வடிவிலான கேமரா ஐலேண்ட்-ஐ போலவே தெரிகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பிலான ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வரும்.

அது 6.7 இன்ச் அளவிலான கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவாக இருக்கலாம். இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷனையும் பெறலாம்.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

சிப்செட் மற்றும் சாஃப்ட்வேர்:

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ப்ராசஸர் 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் உடன் இணைக்கப்படலாம். மேலும் இதன் பேஸிக் ஆப்ஷனில் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம்பெறலாம்.

OnePlus 11 அறிமுகம்: இன்னையோட மற்ற பிராண்டுகள் எல்லாம் காலி!

சாஃப்ட்வேரை பொறுத்தவரை, OnePlus 11 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ColorOS 13 -ஐ கொண்டிருக்கும்.

ரியர் கேமரா செட்டப் மற்றும் செல்பீ கேமரா:

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் மெயின் கேமராவாக 50MP சோனி IMX890 சென்சார் பேக் செய்யப்படலாம். உடன் 48MP வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2x போர்ட்ரெய்ட் சென்சாரும் இணைக்கப்படலாம்.

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் கேமராவானது 12% மேம்படுத்தப்பட்ட கலர் மற்றும் ஒயிட் பேலன்ஸ் அக்யூரஸியை (Colour and white balance accuracy) போன்ற முன்னேற்றங்களுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

OnePlus 11 அறிமுகம்: இன்னையோட மற்ற பிராண்டுகள் எல்லாம் காலி!

மேலும் இந்த போனில் உள்ள Hasselblad பிராண்டட் கேமராக்கள் ஆனது RAW போட்டோக்களை பதிவு செய்யும் திறனை ஆதரிக்கலாம். செல்பிக்களை பொறுத்தவரை, இதில் 16MP கேமரா இடம்பெறலாம்.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்:

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி இடம்பெறலாம். இது 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர் இடம்பெறாமல் போகலாம்!

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

ஒன்பிளஸ் 11 அறிமுகம்: லைவ் ஸ்ட்ரீம்-ஐ பார்ப்பது எப்படி?

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வானது, சீனாவில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 4) பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி நடக்கும்!

தற்போது நடக்கும் சீன வெளியீட்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமை (Live Stream) பார்க்க விரும்புபவர்கள் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ சீன இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது இங்கே கிளிக் செய்யலாம்!

Best Mobiles in India

English summary
OnePlus 11 Launch Today 2023 January 4 Check Specifications and Event Live Stream Link

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X