மறுபடியுமா! முதல்ல ரூ.6499-க்கு.. இப்போது ரூ.8,499-க்கு! இந்தியாவுக்கு வரும் இன்னொரு சூப்பர் பட்ஜெட் போன்!

|

இந்தியாவில், கடந்த வாரம் ரூ.6,499 க்கு ஒரு சூப்பரான பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget Phone) அறிமுகமானது. அதனை தொடர்ந்து அதே பிராண்டின் கீழ் இன்னொரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.

அதென்ன ஸ்மார்ட்போன்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

போக்கோவின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

போக்கோவின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

கடந்த வாரம் இந்தியாவில், போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக போக்கோ சி50 (POCO C50) மாடல் வெறும் ரூ.6499 க்கு அறிமுகமானது.

அதனை தொடர்ந்து இந்நிறுவனத்தின் கீழ் மற்றொரு சி-சீரிஸ் (C-Series) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது, அது போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போன் ஆகும்.

ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!

போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி!

போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி!

போக்கோ சி55 ஸ்மார்ட்போன், கடந்த 2022 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி (Redmi 12C) ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது ரெட்மி சி12 ஸ்மார்ட்போன் அதே பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ஆகாமல், போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ சி55 ஆக வெளியாகும்.

இதன் அம்சங்கள் அத்துப்படி!

இதன் அம்சங்கள் அத்துப்படி!

போக்கோ சி55 மட்டுமல்ல சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி50 கூட ஒரு ரீபிராண்டட் வெர்ஷன் தான். இன்னும் சொல்லப்போனால் போக்கோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட எல்லா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ரெட்மி ஸ்மார்ட்போன்களின் ரீபிராண்டட் வெர்ஷன்களே ஆகும்.

இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், போக்கோ சி சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை வழங்கும் என்பதை நம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அப்படியாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்களும் எங்களுக்கு அத்துப்படி!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

போக்கோ சி55-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்?

போக்கோ சி55-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்?

போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகும். ஆக போக்கோ சி55 ஆனது 6.71-இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

மேலும் அது ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் மூலம் இயங்கும். இதே சிப்செட் தன ரெட்மி நோட் 9, ரியல்மி நார்சோ 20, மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1, மோட்டோ ஜி31 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. இது மிகவும் பொதுவான ஒரு மிட்-ரேன்ஜ் சிப்செட் (Mid-range Chipset) ஆகும்!

என்ன கேமரா.. என்ன பேட்டரி?

என்ன கேமரா.. என்ன பேட்டரி?

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். இதன் ரியர் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷும் அடக்கம். முன்பக்கத்தை பொறுத்தவரை 5எம்பி செல்பீ கேமரா இருக்கு.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் அது 10W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர்களுக்காக மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்!

மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்!

ரெட்மி 12சி ஸ்மார்ட்போனை போலவே போக்கோ சி55 ஸ்மார்ட்போனும் கூட மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

ஆதாவது 4ஜிபி + 64ஜிபி, 4ஜிபி + 128ஜிபி, மற்றும் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்களில் வெளியாகும். இவற்றின் விலை நிர்ணயம் முறையே ரூ.8,499, ரூ.9,499 மற்றும் ரூ.10,999 ஆக இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
One More Super Budget POCO Smartphone Coming to India Check Poco C55 Expected Price Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X