பட்ஜெட் விலை 5G Phone எதுக்கு? கூட கொஞ்சம் காசு போட்டா.. இந்த லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் 5G போனை வாங்கிடலாமே!

|

ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் (Budget Price 5G Phones) மீது உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால்.. அவைகளை வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் வரவில்லை என்றால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனென்றால், ரூ.12,000 என்கிற பட்ஜெட்டில் இருந்து கூட கொஞ்சம் பணம் போட்டால்.. நீங்கள் வாங்கக்கூடிய ஒரு தரமான மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனை (Mi range 5G Phone) பற்றிய கட்டுரையே இது!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

ஒப்போவின் புத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!

ஒப்போவின் புத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!

நாம் இங்கே பேசுவது ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றியே ஆகும். அது ஒப்போ ஏ78 5ஜி (Oppo 78 5G) ஆகும்.

முதலில் மலேசிய சந்தையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், வருகிற ஜனவரி 18 ஆம் தேதியன்று இந்தியாவிலும் (India) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தனது டிவிட்டர் பக்கம் வழியாக ஒப்போ இந்தியா (Oppo India) நிறுவனம் ஒப்போ A78 5G ஸ்மார்ட்போனின் இந்திய வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

விலையை மீறும் டிசைன்!

விலையை மீறும் டிசைன்!

முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இது என்னென்ன அம்சங்களை வழங்கும் என்பது குறித்து எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.

டிசைனை பொறுத்தவரை, ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். மேலும் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஒரு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்பக்கம் ஆனது மேட் ஃபினிஷ் ஆக இருக்கும். உடன் கேமரா ஐலேண்ட்டை நோக்கி செல்லும்படியான செங்குத்தான மற்றும் பளபளப்பான ஸ்ட்ரைப் (Stripe) ஒன்றும் இடம்பெறும்.

பெரிய டிஸ்பிளே.. நல்ல ரெஃப்ரெஷ் ரேட்!

பெரிய டிஸ்பிளே.. நல்ல ரெஃப்ரெஷ் ரேட்!

ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1612 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.56-இன்ச் அளவிலான எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. மேலும் இது பாண்டா கிளாஸ் (Panda Glass) கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தாலும் கூட இது, செல்பீ கேமரா வழியாக ஃபேஸ் அன்லாக் (Face Unlock) தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கும்.

"போதும்" என்று சொல்லும்படியான கேமராக்கள்!

இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 50MP மெயின் சென்சார் மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும்படியான 8MP கேமரா உள்ளது.

என்ன ப்ராசஸர்... எவ்வளவு ஸ்டோரேஜ்?

என்ன ப்ராசஸர்... எவ்வளவு ஸ்டோரேஜ்?

ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் கொண்டு இயங்குகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜையும் வழங்கும். இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த கலர்ஓஎஸ் 13 (ColorOS 13) உடன் அனுப்பப்படும்.

சூப்பரான பேட்டரி!

சூப்பரான பேட்டரி!

ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கியமான அம்சங்களில் இதன் பேட்டரியும் அடங்கும். ஏனென்றால், இது 33W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 16 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்கும்.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இதில் வைஃபை 5, ப்ளூடூத் வி5.3, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன.

என்ன விலை?

என்ன விலை?

ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் கருப்பு என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகும். இந்திய சந்தையில் நிலவும் 5ஜி போன்கள் தொடர்பான போட்டித்தன்மை காரணமாக, ஒப்போ ஏ78 5ஜி ஆனது இந்தியாவில் அறிமுகமான வேகத்தில் விற்பனைக்கு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

Best Mobiles in India

English summary
New Mid Range 5G Smartphone Under Rs 20000 Oppo A78 5G To Launch In India On January 16

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X