ரெட்டைக் கதிரே.! Redmi K60 போனை Poco F5 ஆக களமிறக்கும் நிறுவனம்.. ஒரு டுவிஸ்ட் இருக்கு!

|

சமீபகாலமாக போக்கோ நிறுவனத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. போக்கோ ஸ்மார்ட்போனுக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி விரைவில் வெளியாக இருக்கும் Poco ஸ்மார்ட்போன் குறித்த முக்கியத் தகவல் ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. இது போக்கோ எஃப்5 5ஜி போனின் உலகளாவிய மாறுபாடு குறித்த தகவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Poco F5

Poco F5

போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் ஆனது Poco F5 ஆக இருக்கலாம் எனவும் இது மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்ட் போனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என வதந்தி தகவல் தெரிவிக்கிறது.

விரைவில் Poco F5 5G

விரைவில் Poco F5 5G

Poco F5 5G என அழைக்கப்படும் புதிய Poco ஸ்மார்ட்போன் சர்வதேச அறிமுகத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. புதிய Poco ஸ்மார்ட்போன் ஒன்று சமீபத்தில் IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டிருக்கிறது.

ரெட்மி கே சீரிஸ்

ரெட்மி கே சீரிஸ்

விரைவில் இந்த போன் வெளியாகும் எனவும் தகவல்கள் குறிப்பிடுகிறது. அதேபோல் வெளியாகியுள்ள தகவலில் இந்த போன் மறுபெயரிடப்பட்ட ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

போக்கோ போனாக களமிறங்கும் ரெட்மி

போக்கோ போனாக களமிறங்கும் ரெட்மி

இந்த மர்மமான போக்கோ ஸ்மார்ட்போன் மற்றொரு சான்றிதழ் தளத்திலும் தோன்றி இருக்கிறது. அதிலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. POCO 23013PC75G என்ற மாடல் எண்ணுடன் தோன்றி இருக்கும் POCO F5 5G, சமீபத்தில் சிங்கப்பூர் IMDA சான்றிதழ் ஆணையத்தில் சான்றளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குறியீட்டு எண் ஆனது போக்கோ ஸ்மார்ட்போனை ரெட்மி உடன் ஏறத்தாழ இணைக்கும் வகையில் இருக்கிறது.

Poco F5 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Poco F5 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Poco F5 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். Poco F5 5G ஆனது மறுபெயரிடப்பட்ட Redmi K60 போனாக இருக்கும் பட்சத்தில் இதன் அம்சங்களை ஓரளவு கணித்துவிடலாம். இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் QHD+ AMOLED பேனல் கொண்டிருக்கும் எனவும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1,400 nits உச்ச பிரகாசம், HDR10+ ஆதரவு மற்றும் 1,920Hz PWM ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயலி

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயலி

Poco F5 5G ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயலி மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் இந்த சிப்செட்கள் தான் ஏணைய முக்கிய நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Redmi K60 ஸ்மார்ட்போன் போன்றே போக்கோ எஃப்5 5ஜி போனிலும் டிரிபிள் ரியர் கேமராக்கள் இடம்பெறும் பட்சத்தில் அது 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்

இவை அனைத்தும் தகவலின் அடிப்படையில் ஆனது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போக்கோ நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி நிறுவனம் விரைவில் இந்த ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யும் எனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Mysterious Poco Smartphone Spotted in Online: Poco F5 Could Rebranded Version of Redmi K60

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X