இந்த Infinix Note 12 Pro போனை இன்றே வாங்கிடணும்..! பட்ஜெட் விலையில் 108MP கேமராவா?

|

Infinix நிறுவனம் கடந்த வாரம், Infinix Note 12 Pro என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் இன்று நாட்டில் அதன் முதல் விற்பனையைத் துவங்குகிறது. இந்த மதியம் முதல் இந்த புதிய Infinix Note 12 Pro சாதனம் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய பட்ஜெட் பிரைஸ் சாதனத்தை எங்கிருந்து என்ன விலையில் வாங்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Infinix Note 12 Pro போனின் விற்பனை விபரங்கள்

Infinix Note 12 Pro போனின் விற்பனை விபரங்கள்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ சாதனம் இன்று மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இது இன்று பிரத்தியேகமாக பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. முதல் விற்பனையின் அறிமுகச் சலுகையாக கேஷ் ஆன் டெலிவரி கொடுக்காமல், நேரடியாக ப்ரீபெய்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது ரூ. 1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, Flipkart Plus உறுப்பினர்கள் SuperCoins உடன் 500 ரூபாய் தள்ளுபடியைப் பெறவும் வாய்ப்புள்ளது.

Infinix Note 12 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Infinix Note 12 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Infinix Note 12 Pro இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது. இந்த புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ மாடல் ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.16,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகச் சலுகையைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு இதன் விலை இன்னும் கணிசமாகக் குறைய அதிக வாய்ப்புள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

Infinix Note 12 Pro சிறப்பம்சம்

Infinix Note 12 Pro சிறப்பம்சம்

இந்த டிவைஸ் 6.7' இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 180Hz டச் சாம்பிளிங் உடன் 100% DCI-P3 அம்சத்துடன் 1000nits வரை பிரைட்னஸ் உடன் வாட்டர் டிராப் நாட்ச் அம்சத்தில் வெளிவருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியூவுடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் 108MP கேமராவா?

பட்ஜெட் விலையில் 108MP கேமராவா?

முன்பே சொன்னது போல், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் 5ஜிபி வரை விர்ச்சுவல் ரேமையும் ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 10.6 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ஒரு பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலும் கூட, இதில் 108MP பிரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார், AI லென்ஸ் மற்றும் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

ஆகாசமான பேட்டரி லைஃப் உடன் சூப்பர் கூல் நிறங்களில்

ஆகாசமான பேட்டரி லைஃப் உடன் சூப்பர் கூல் நிறங்களில்

இது 16MP முன்பக்க ஷூட்டர் பிரண்ட் டூயல் எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5,000mah பேட்டரியை பேக் செய்கிறது. இது 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த சாதனம் Tuscany Blue, Alpine White மற்றும் Volcanic Gray வண்ண விருப்பங்களில் வருகிறது. இது டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Infinix Note 12 Pro போனுக்கு நிகரான வேற மாடல்கள் எது தெரியுமா?

Infinix Note 12 Pro போனுக்கு நிகரான வேற மாடல்கள் எது தெரியுமா?

இந்த Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் Redmi Note 11S, Realme 9 மற்றும் Moto Edge 20 Fusion போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடுகிறது. வரவிருக்கும் POCO M5, செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனமும் இந்த மாடலுக்கு நிகரான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. உண்மையைச் சொல்லப் போனால் Infinix Note 12 Pro பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு பெஸ்ட் சாய்ஸ் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 Pro Budget Price Smartphone Go For First Sale Today at 12 Noon Via Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X