Home
Mobile

பிளிப்கார்ட் காலி.. பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 32MP கேமரா.. LCD டிஸ்பிளே... புது REDMI போன்.. எந்த மாடல்?

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி (REDMI A7 Pro 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் 6300mAh பேட்டரி, 32 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்சிடி டிஸ்பிளே கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, பேட்டரி, டிஸ்பிளே, சிப்செட் மற்றும் டிசைன் விவரங்களானது அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, குளோபல் மார்கெட்டில் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது.

பிளிப்கார்ட் காலி.. பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 32MP கேமரா.. மாடல்?

இப்போது, இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி மற்றும் 5ஜி சிப்செட் கொண்ட மாடலாக ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி வெளியாக இருக்கிறது. ஆனால், டிசைன் மற்றும் கலர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குளோபல் மார்கெட்டில் கிடைத்த ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி வேரியண்ட்டை போலவே இருக்கிறது. முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI A7 Pro 5G Specifications): ஆக்டா கோர் 5ஜி சிப்செட்டை இந்த ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி கொண்டுள்ளது. டைமன்சிட்டி அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்க வாய்ப்புள்ளது. 6300mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. இந்த செக்மெண்ட்டில் பெரிய டிஸ்பிளே மாடலாக 6.9 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் சியோமி ஹைப்பர்ஐலேண்ட் (Xiaomi HyberIsland) பீச்சர்களை கொடுத்துள்ளது. 32 எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளன. டிசைனை பார்க்கையில், ஆரஞ்ச் கலரில் கிடைக்க உள்ளது.

குளோபல் மார்கெட்டில் வெளியான சன்செட் ஆரஞ்ச் (Sunset Orange) போலவே அமேசான் தளத்தில் பதிவிடப்பட்ட போஸ்டரில் கலர் இருக்கிறது. மேலும், குளோபல் மார்கெட்டில் பிளாக் (Black), மிஸ்ட் ப்ளூ (Mist Blue), பால்ம் கிரீன் (Palm Green) ஆகிய கலர்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கலர்கள் இந்திய மார்கெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது.

ரெட்மி ஏ7 ப்ரோ அம்சங்கள் (REDMI A7 Pro Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமராவில் ஃபிலிம் கேமரா (FilmCamera), எச்டிஆர் மோட் (HDR Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) பீச்சர்கள் வருகின்றன.

8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p ரெக்கார்டிங் கிடைக்கிறது. யுனிசோக் டி7250 ஆக்டா கோர் (UNISOC T7250 Octa Core) சிப்செட்டை கொடுத்து உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆனால், இந்திய வேரியண்ட்டில் 6300mAh பேட்டரி மற்றும் சிப்செட் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI A7 Pro 5G With 6300mAh Battery To Launch in India on April 13 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X