மிரளப்போகுது விற்பனை.. பட்ஜெட்ல 5800mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (REDMI Note 15 SE 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடியுடன் நாளை தொடங்க இருக்கிறது. பிரீமியம் வீகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5800mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வீகன் லெதர் பேனலில் ஸ்மார்ட்போன்களை விரும்பும் பிரியர்களுக்கு இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி பக்காவாக இருக்கும். ஏனென்றால், கிரிம்சன் ரிசர்வ் (Crimson Reserve) கலரில் பிரீமியம் லெதர் பேக் பேனல் கொடுக்கிறது. மார்பிள் லைக் லுக் கொடுக்கிறது. கோல்டன் கோடெட் மிடில் ஃபிரேம் மற்றும் கேமரா பம்ப் கிடைக்கிறது. கர்வ் டிஸ்பிளேவுக்கு ஏற்ப டியூரபிலிட்டி உள்ளது.

டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. மேலும், டாப்-எண்ட் வேரியண்ட்களில் கிடைப்பதை போலவே IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 7.35 எம்எம் ஸ்லீக் பாடி கிடைப்பதால், ஸ்லிம் லுக் கொடுக்க மாடலாகவும் இருக்கிறது.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 தள்ளுபடி விலைக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கும். மேலும், நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 ஆரம்ப விலைக்கு இந்த ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். நாளை (ஏப்ரல் 7) முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி அம்சங்கள் (REDMI Note 15 SE 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், சியோமி ஹைப்பர் ஓஸ் 2 (Xiaomi Hyper OS 2) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கிடைக்கிறது.
20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 5800mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து உள்ளது. கிரிம்சன் ரிசர்வ் (Crimson Reserve) மட்டுமல்லாமல், ஃப்ரோஸ்டட் ஒயிட் (Frosted White), கார்பன் பிளாக் (Carbon Black) கலர்களும் கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே மற்றும் இன்பிராரெட் சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications








