Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.2000 ஆபர் ரேட்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. 256GB மெமரி.. எந்த போன்?

ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 256 ஜிபி மெமரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பெரிய பேட்டரியுடன் கிடைக்கும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மாடலாக இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 360 டிகிரியில் கூலிங் கொடுக்கும்படி கிராஃபைன் பேக் கவர் கொடுத்து உள்ளது. ஆர்மர் ஷெல் கிளாஸ் மற்றும் IP69 ரேட்டிங் கொடுத்து உள்ளது. நெக்ஸ்ட் ஏஐ (NEXT AI) கொடுத்து உள்ளது. ஆகவே, ஏஐ பிளானர் (AI Planner), ஏஐ கேமிங் கோச் (AI Gaming Coach) உள்ளது.

SALE பிச்சிக்குது.. ரூ.2000 ஆபர் ரேட்ல 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஈ-ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே உள்ளது. இப்படி டியூரபிலிட்டி, பர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக பேக்கப் கொடுக்கும்படி இந்த ரியல்மி ஜிடி 7டி இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 தள்ளுபடி போக கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.37,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7டி அம்சங்கள் (Realme GT 7T Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 MAX 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைத்துள்ளது.

6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேடட் கிடைக்கிறது. மேலும், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

SALE பிச்சிக்குது.. ரூ.2000 ஆபர் ரேட்ல 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மேலும், 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ கிளார் ரீமூவர் (AI Glare Remover) கிடைக்கிறது.

ஏஐ டிராவல் ஸ்னாப் (AI Travel Snap), போர்ட்ராய்டு ஸ்னாப் (Portrait Snap) மற்றும் ஏஐ 2கே லைவ் போட்டோ (AI 2K LivePhoto) பீச்சர்களும் கிடைக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser) பீச்சரும் உள்ளது. 4கே சினிமாடிக் வீடியோ ரெக்கார்டிங் (4K Cinematic Video Recording) கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டைப்-சி ஆடியோ போர்ட் சப்போர்ட் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. 8.88 எம்எம் தடிமன் மற்றும் 205 கிராம் எடை கொடுத்து உள்ளது.

IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இருக்கிறது. ரேசிங் எல்லோ (Racing Yellow), ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black) மற்றும் ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. டியூரபில் குவாலிட்டி மற்றும் ப்ரோ லெவல் ஈ-ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளேவுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 7T With 7000mAh Battery 120W Fast Charging Available At Rs 2000 Bank Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X