பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மார்கெட் விலையில் இருந்து மலிவாக கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக கிடைக்கின்றன. அதே நேரத்தில் பட்ஜெட் விலையிலும் கிடைப்பதால், சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் மாடல்களிலும் டாப் ஆப்ஷனாக இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கூடுதல் வரவேற்பை பெற்றது.

ஏனென்றால், 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனை விட தின் மற்றும் லைட்வெயிட் பாடி கொடுத்து, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டி தூக்கி இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், IP54 ரேட்டிங் போன்ற டியூரபிலிட்டி பீச்சர்களையும் கொடுத்துள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.20,499ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.500 நேரடி விலை குறைப்பு போக ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தள்ளுபடியுடன் ரூ.18,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மொத்தமாக ரூ.1,500 தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும். மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மாடல்களும் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கிடைத்து உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.5 எம்எம் தடிமன் மற்றும் 192 கிராம் எடை கொடுத்து உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைத்து உள்ளது. பிளாக் (Black), ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








