Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் வெளியான ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், ஐபி69 ரேட்டிங், 50 எம்பி கேமரா, 120Hz டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. 3900 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்டுள்ளது. பெரிய பேட்டரியை கொடுத்தும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. இது அண்டர்வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். ஆகவே, அண்டர்வாட்டர் போட்டோகிராபி கொண்ட மாடலாக இருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

மேட் பினிஷிங் பேக் பேனல் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுத்துள்ளது. இப்போது, 26 சதவீத தள்ளுபடி போக பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.21,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் ஆர்டர் செய்தால், ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.20,999 விலைக்கு இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கும் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.17,999 ஆக இருக்கிறது.

IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் டிராப் ரெசிஸ்டன்ஸ், கோல்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட டியூரபிலிட்டியும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து உள்ளது. 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே, 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக ஏஐ கேம்பூஸ்ட் 2.0 மற்றும் லேக் ப்ரீ கால்களுக்காக ஏஐ லிங்பூஸ்ட் 3.0 கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கேமராவில் ஏஐ ரீகம்போஸ், ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் உள்ளிட்டவை வருகின்றன.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.61 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொடுத்து உள்ளது. ப்ரிசம் ஒயிட், ப்ரிசம் வயலெட் மற்றும் ஐசி ப்ளூ ஆகிய மூன்று கலர்களில் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K14 5G With 8GB RAM 256GB Storage 26 Percent Discount on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X