Home
Mobile

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.7599 க்கு LAVA போன்.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

லாவா போல்டு என்2 ப்ரோ (Lava Bold N2 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடியுடன் நாளை தொடங்குகிறது. மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 90Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த லாவா போல்டு என்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் தள்ளுபடி மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா நிறுவனத்தின் போல்டு சீரீஸ் மாடல்களில் பிரீமியம் லுக் கிடைக்கும். இதிலும் குளோசி மிடில் ஃபிரேம் மற்றும் மேட் பினிஷிங் பேக் பேனலுடன் பிரீமியம் லுக் கிடைக்கிறது. இந்த லுக்கில் எக்லிப்ஸ் கிரே (Eclipse Grey) மற்றும் அரோரா கோல்டு (Aurora Gold) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஒரே வேரியண்ட் மட்டுமே கிடைக்க உள்ளது.

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.7599 க்கு LAVA போன்.. 5000mAh பேட்டரி!

இந்த வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.400 தள்ளுபடி போக ரூ.7,599 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், யுபிஐ வழியாக ஆர்டர் செய்தால், ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பிளிப்கார்ட் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாளை (ஏப்ரல் 5 ஆம் தேதி) முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 4 ஜிபி ரேம் மட்டுமே கிடைத்தாலும், 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆனால், மார்கெட்டில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வந்துவிட்டது. இருப்பினும், 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் (Android Update) கிடைக்கிறது.

மேலும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. ஆட்டோ கால் ரெக்கார்டிங் (Auto Call Recording), அனோனிமஸ் கால் ஹேண்ட்லிங் (Anonymous Call Handling) போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்க இருப்பதால், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.

லாவா போல்டு என்2 ப்ரோ அம்சங்கள் (Lava Bold N2 Pro Specifications): இந்த பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த லாவா போல்டு என்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.

6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 Pro With 4GB RAM 128GB Storage Sale Tomorrow on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X