மிரளுது விற்பனை.. 6000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. 50MP கேமரா.. 6GB ரேம்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. எல்சிடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங், டைமன்சிட்டி 6300 சிப்செட்டிலும் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வீகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும். ஆனால், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில் மட்டுமே பட்ஜெட் இருக்கும். இதில் ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. லைம்லைட் கிரீன் (Limelight Green), ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) கலர்கள் உள்ளது.

இந்த கலர்களுடன் வீகன் லெதர் பேனல் கொடுத்து உள்ளது. மெட்டாலிக் ஃபினிஷிங் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக்கை விரும்பும் சாம்சங் பிரியர்களுக்கு ஏற்ப கிடைக்கிறது. மேலும், 12 பேண்ட்கள் சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது.
ஒன் யுஐ 8.0 (One UI 8.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி உள்ளிட்ட லேட்டஸ்ட் பீச்சர்களை பெற்று கொள்ளலாம். மேலும், 6 ஜெனரேஷனுக்கு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து உள்ளது. அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. இப்போது, தள்ளுபடியில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.14,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். யுபிஐ வழியாக ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உள்ளது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. சிப்செட், பேட்டரி மற்றும் டிசைனில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி பட்டையை கிளப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








