வெச்சான் பாரு Vivo.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை தொடங்க இருக்கிறது. சாம்சங் சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி வரையில் மிரளவிட்டுள்ளது. இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ நிறுவனத்தின் முதலாவது டார்க்னஸ் க்ளோவ் டெக்னாலஜி (Darkness Glow Technology) கொண்ட மாடலாக விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இருக்கிறது. யுவி அல்லது சன்லைட்டில் பட்ட பிறகு டார்க் லைட்டிங்கின் போது மிளிரும் பேக் பேனல் கிடைக்கிறது. டைனாமிக் ரிங் கேமரா மாடியூல் (Dynamic Ring Camera Module) மற்றும் அல்ட்ரா-தின் பெசல் கொண்ட ப்ரன்ட் டிசைன் கிடைக்கிறது.

டிசைன் மட்டுமல்லாமல், இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப ஏஐ 30எக்ஸ் சூப்பர்ஜூம் (AI 30X SuperZoom) மற்றும் டெலிபோட்டோ என்ஹான்ஸ்மெண்ட் (Telephoto Enhancement) கிடைக்கிறது. மல்டிபோகல் போர்ட்ராய்டு (Multifocal Portrait) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்எம் கிளாசிக் போர்ட்ராய்டு, 35 எம்எம் ஸ்ட்ரீட் போர்ட்ராய்டு உள்ளிட்ட போகல் லென்த் கிடைக்கிறது.
மேலும், ஏஐ போட்டோகிராபி சூட் (AI Photography Suite) கொண்ட மாடலாக இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் ஏஐ மேஜிக் வெதர் (AI Magic Weather), ஏஐ மேஜிக் லேண்ட்ஸ்கேப் (AI Magic Landscape) மற்றும் சீசன் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்க ஏஐ ஃபோர்-சீசன் போர்ட்ராய்டு (AI Four-Season Portrait) உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கிறது.
நாளை (ஏப்ரல் 9) முதல் விற்பனை தொடங்குகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் நிலை ரூ.44,999ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் தள்ளுபடி போக வாங்கி கொள்ளலாம்.
நார்தன் லைட்ஸ் பர்பிள் (Northern Lights Purple) மற்றும் மான்சூன் ப்ளூ (Monsoon Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் விலைக்கு கிடைப்பதால், 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது.
விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. டயமண்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) கிடைக்கிறது.
இந்த புரொடெக்சனுடன் 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 90W சார்ஜிங், 7000mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








