ஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.!

|

ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஐபோனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகம்

அமெரிக்காவில் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இனச் எப்ஹெச்டி +ஓஎல்இடி ஸ்கிரீன், பிக்சல் 4எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் கியூஎச்டி + ஓஎல்இடி ஸ்கிரீன் இருக்கின்றது. இரு டிஸ்பிளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கின்றது.

3 ஆண்டுக்கான அப்டேட்கள்

3 ஆண்டுக்கான அப்டேட்கள்

இரண்டு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 3 ஆண்டுக்கான ஆண்ட்ராய்டு மற்றுமு; செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. அத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் லென்ஸ்

கேமரா மற்றும் லென்ஸ்

இதில் , 12.2 எம்பி கேமரா, 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர போட்டோக்களை அழகாக்கும் புதயி அசம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அசைவுகளை அறிந்து செயல்படும் திறமை இந்த போனுக்கு இருக்கின்றது

போன்களின் வெர்ஷன்

போன்களின் வெர்ஷன்

பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64ஜிபி வெர்ஷன் விலை 799 டாலர்கள் எனவும், 128ஜிபி மாடல் விலை 899 டாலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாடல் விலை 899 டாலர்கள் எனவும், 128ஜிபி மாடல்க விலை 999 டாலர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 எப்போது விற்பனை

எப்போது விற்பனை

இந்த ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அக்டோபர் 24ம் தேதி விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Google pixel 4 pixel 4 xl rival iphone 11 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X