ரூ.4,000 ஆஃபருடன் ப்ரீ-ஆர்டர் பிச்சிக்குது.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 256GB ஸ்டோர்ஜ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஐபோன் 17இ (iPhone 17e) ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. ஆரம்பமே உடனடி டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், ப்ரீ-ஆர்டரில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஐபோன் 17இ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் ப்ரீ-ஆர்டர் சலுகைகள் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,900ஆகவும், 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.84,900ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,000 உடனடி தள்ளுபடி போக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ரூ.60,900 ஆரம்ப விலைக்கு இந்த ஐபோன் 17இ மாடலை வாங்கி கொள்ளலாம். மார்ச் 11ஆம் தேதி முதல் வாங்கி கொள்ள கிடைக்கும்.

ஐபோன் 17இ அம்சங்கள் (iPhone 17e Specifications): ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்ட சிக்ஸ்-கோர் ஏ19 3என்எம் (Six-Core A19 3nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. 4 கோர் ஜிபியு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் கொண்டுள்ளது. செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது.
460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) கொடுக்கப்பட்டு உள்ளது. ஐபோன மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் நானோ + ஈசிம் சப்போர்ட் கொடுத்து உள்ளது. 48 எம்பி வைடு ஆங்கிள் ரியர் கேமரா உள்ளது.
2X டெலிபோட்டோ, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) மற்றும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) கிடைத்துள்ளது. ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash), 4K டால்பி விஷன் (Dolby Vision) ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4K எச்டிஆர் சினிமாடிக் மோட் (Cinematic Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. 12 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது.
ஆட்டோ போகஸ் (Auto Focus), போகஸ் பிக்சல் (Focus Pixels) மற்றும் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) சப்போர்ட் கொடுத்து உள்ளது. 4K டால்பி விஷன் ரெக்கார்டிங் உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த ஐபோன் 17இ மாடலுக்கு கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைத்து உள்ளது.
7.8 எம்எம் தடிமன் மற்றும் 170 கிராம் எடை கொண்டுள்ளது. பில்ட்-இன் ரீசார்ஜபில் லித்தியம்-அயன் பேட்டரி கொடுத்து உள்ளது. 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 20W அடாப்டரில் சார்ஜ் செய்தால், 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.3 கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் சாப்ட் பிங்க் (Soft Pink) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. மார்ச் 11ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications