Home
Deal of the day

Apple படுத்தே விட்டான் ஐயா.. அடிமட்ட விலைக்கு லேட்டஸ்ட் ஸ்லிம் iPhone மாடல்.. மெகா விலை வீழ்ச்சி!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் எலெக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் (Amazon Electronics Premier League 2026) என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, ஆப்பிளின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஐபோன் மாடல் ஆன ஐபோன் ஏர் (iPhone Air) ஆனது மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

அமேசானில் தற்போது ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், எந்த பேங்க் ஆபர் அல்லது கார்டு டிஸ்கவுன்ட்டும் இல்லாமல் நேரடியாக ரூ.26,401 விலை குறைப்பை பெற்று ரூ.93,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.1,19,900 க்கு அறிமுகமானது. குறிப்பிட்ட அமேசான் விற்பனை மார்ச் 12 வரை நடக்கும்.

 அடிமட்ட விலைக்கு Apple-ன் லேட்டஸ்ட் ஸ்லிம் iPhone மாடல்!

சமீபத்தில் இந்தியாவில் ஐபோன் 17இ மாடல் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 17இ மாடல் ஆனது மொத்தம் மூன்று வண்ணங்களில் விற்கப்படும்: பிளாக், சாஃப்ட் பிங்க் மற்றும் ஒயிட். ஐபோன் 17இ மாடலின் இந்திய விற்பனை, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஆப்பிள் வலைத்தளம் மற்றும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக தொடங்கும்

ஆப்பிள் ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் ஏர் என்பது ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் (Ultra Slim) மாடல் ஆகும். கூடவே இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை (eSIM Support) மட்டுமே கொண்டிருக்கும்.

ஐபோன் ஏர் ஆனது இதுவரை வெளியானதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடல் ஆகும், அளவீட்டில் இது வெறும் 5.6மிமீ மட்டுமே உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. மேலும் இது 80% மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷனும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 17 ஏர் மாடலின் விரிவான அம்சங்கள்: பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் ஏர் என்பது ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் (Ultra Slim) மாடல் ஆகும். கூடவே இசிம்-ஒன்லி மாடலும் ஆகும். அதாவது இசிம் ஆதரவை (eSIM Support) மட்டுமே கொண்டிருக்கும்.

ஐபோன் ஏர் ஆனது இதுவரை வெளியானதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடல் ஆகும், அளவீட்டில் இது வெறும் 5.6மிமீ மட்டுமே உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. மேலும் இது 80% மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன் மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 ப்ரொடெக்ஷனும் உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.5 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை (Retina XDR OLED) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேயில் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion), 10-120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய அம்சங்களுக்கான ஆதரவும் உள்ளன.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் ஏர் மாடல் ஆனது ஏ19 ப்ரோ சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவுடனும் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை. ஐபோன் ஏர் மாடலில் சிங்கிள் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைமரி கேமரா உள்ளது.

சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருந்தாலும் கூட இது சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எப்/1.6 அபெர்க்ஷர் மற்றும் 2எக்ஸ் டெலிஃபோட்டோ திறன்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 18-மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை - இது "நாள் முழுவதும்" பேட்டரி லைஃப்பை வழங்குவதாகவும், ஒரே சார்ஜில் 27 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மெங்கும் 30 நிமிட சார்ஜிங்கில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone Air Gets Rs 26400 Direct Price Cut in Amazon Electronics Premier League 2026 Ends March 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X