முடிச்சு விட்டாங்க போங்க.. iPhone 17e க்கு பதிலாக பலரும் ஆர்டர் போடும் 7 போன்கள்!
கசப்பான உண்மை என்னவென்றால் - ஆப்பிளின் (Apple) லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை மாடல் ஆக ஐபோன் 17இ (iPhone 17e) அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், மார்ச் 11 முதல் ஆரம்பிக்கும் விற்பனைக்கான முன்பதிவுகள் ஏகபோகமாக நடந்து கொண்டிருந்தாலும் - இது ஒப்பீட்டளவில் ஐபோன் 16இ மாடலை விட குறைந்தபட்ச மேம்படுத்தல்கள் மற்றும் அதே வடிவமைப்பையே கொண்டுள்ளது.
இதுக்கு எதுக்கு 64,900 ருபாய்? ஐபோன் 17இ மாடலை எதுக்கு நான் வாங்கணும்? என்கிற கேள்வி உங்களுக்குள் ஏற்கனவே எழுந்திருந்தால்.. ஒருவேளை நீங்கள் ஐபோன் 17இ மாடலுக்கான "சரியான தரமான" ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை (iPhone 17e Alternatives) தேடுகிறீர்களானால், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 7 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

1. கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) - ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது
2. விவோ எக்ஸ்200டி (Vivo X200T) - ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) - பிப்கார்ட்டில் ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது
4. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) - விஜய் சேல்ஸ்-ல் ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது
5. ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) - விஜய் சேல்ஸ்-ல் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது
6. ஐக்யூ 15ஆர் (iQOO 15R) - ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது
7. ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) - குரோமாவில் விலை குறைக்கப்பட்டு ரூ.47,900 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 17இ மாடலின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவுடன் வருமாம் ஐபோன் 17இ மாடலானது ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்குகிறது. இது ஐபோன் 16இ மாடலை போன்ற அதே 60ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் (1170×2532 பிக்சல்ஸ்) சூப்பர் ரெட்டினா XDR (OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரூ டோன் மற்றும் 800 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ஐபோன் 17இ மாடலானது செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்போடு வருகிறது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ள கிளாஸ் உடன் ஒப்பிடும்போது 3 மடங்கு சிறந்த கீறல் எதிர்ப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ19 சிப் (ஆறு-கோர் CPU, 4-கோர் GPU, 16-கோர் நியூரல் எஞ்சின்) மூலம் இயங்குகிறது
இது 8ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது மற்றும் இது 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐபோன் 17இ மாடல் கடந்த ஆண்டு மாடலை போலவே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான அதே IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலானது எப்/1.6 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ளதை போலவே தெரிகிறது. இதனால் 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் படங்களை எடுக்க முடியும், மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் ஆதரிக்கிறது.
கூடவே ஐபோன் 17இ மாடல் ஆனது "ஆப்டிகல் குவாலிட்டி" 2எக்ஸ் ஜூமையும் ஆதரிக்கிறது. இது 12 மெகாபிக்சல் படங்களை வழங்க இன்-சென்சார் க்ராப்பை பயன்படுத்துவதாக ஆப்பிள் கூறுகிறது. முன்பக்கத்தில், இது எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 12 மெகாபிக்சல் TrueDepth செல்பீ கேமரா உள்ளது
சுவாரசியமாக ஆப்பிள் அதன் ஐபோன் 17இ மாடலில் மேக்சேப்-க்கான ஆதரவை சேர்த்துள்ளது, இது ஐபோன் 16இ "காணாமல்" போன முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஐபோன் 17இ மாடலை - இணக்கமான 20W சார்ஜர் (வயர்டு) மற்றும் 7.5W மேக்சேப் (வயர்லெஸ்) சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பைடூ (BeiDou) மற்றும் நாவிக் (NavIC) ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








