ஒரே ஒரு சார்ஜ் 10 நாட்களுக்கு கவலை இருக்காது: வருகிறது 22,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.!

|

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டூகி அடுத்த மாதம் ஒரு தரமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது Doogee V Max எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது Doogee நிறுவனம். குறிப்பாக இந்த போனின் பேட்டரி வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

22,000 எம்ஏஎச் பேட்டரி வசதி

22,000 எம்ஏஎச் பேட்டரி வசதி

அதாவது Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 22,000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் மட்டும் அறிமுகமானால் உலகின் மிகப்பெரிய பேட்டரி கொண்ட போன் என்ற பெயரை எடுக்கும். குறிப்பாக இந்த போன் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6G சேவைக்கு மனித உடலில் இருந்து பவர் எடுக்குறீங்களா? ஷாக்கிங் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்.!6G சேவைக்கு மனித உடலில் இருந்து பவர் எடுக்குறீங்களா? ஷாக்கிங் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்.!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

Doogee V Max ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கூட உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் 27.3 மிமீ தடிமனாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Doogee நிறுவனம்.

நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. 1 வித்தியாசம் கூட சொல்ல முடியாது! ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. 1 வித்தியாசம் கூட சொல்ல முடியாது! ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!

ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே

விரைவில் அறிமுகமாகும் Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலானஸ்மார்ட்போன்.

யாரு சொன்னது ஓசோன் ஓட்டைய அடைக்க முடியாதுனு.! அடச்சுட்டோம் மாறா.! இனி பூமிக்கு அழிவு இல்ல.!யாரு சொன்னது ஓசோன் ஓட்டைய அடைக்க முடியாதுனு.! அடச்சுட்டோம் மாறா.! இனி பூமிக்கு அழிவு இல்ல.!

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். கேமிங் வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான Doogee V Max ஸ்மார்ட்போன்.

சியோமி,ரியல்மி கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க: பட்ஜெட் விலையில் 5G டேப்லெட் அறிமுகம் செய்தது Lenovo.!சியோமி,ரியல்மி கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க: பட்ஜெட் விலையில் 5G டேப்லெட் அறிமுகம் செய்தது Lenovo.!

சோனி நைட் விஷன் கேமரா

சோனி நைட் விஷன் கேமரா

Doogee V Max ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிரைமரி கேமரா + 20எம்பி சோனி நைட் விஷன் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

 256ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு Doogee V Max ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். கிளாசிக் பிளாக், சன்ஷைன் கோல்ட் மற்றும் மூன்ஷைன் சில்வர் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட் வேணுமா இருக்கு, அருமையான கேமரா வேணுமா இருக்கு - ரெடியா இருங்க வருது புதிய Samsung போன்.!தரமான சிப்செட் வேணுமா இருக்கு, அருமையான கேமரா வேணுமா இருக்கு - ரெடியா இருங்க வருது புதிய Samsung போன்.!

5ஜி ஆதரவு..

5ஜி ஆதரவு..

குறிப்பாக 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Doogee V Max ஸ்மார்ட்போன். பின்பு இந்த போன் அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Doogee V Max smartphone with a 22,000mAh battery will be launched next month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X