கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு காலத்தில் தனித்து கொடிக்கட்டி பறந்த ரெட்மி நிறுவனத்துக்கு இப்போது பலத்த போட்டி இருக்கிறது. இந்த போட்டியில் ரெட்மி நிறுவனம் தொய்வு நிலையை சந்தித்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் இதில் இருந்து மீண்டு வரும் விதமாக தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி நிறுவனம் விரைவில் டர்போ வேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: கவனத்தையும் ஈர்க்கும் டர்போ போன்!

ரெட்மி நோட் 12 சீரிஸ்

ரெட்மி நோட் 12 தொடரில் நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ரெட்மி நோட் 12 டர்போ மாடல் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெறும் வதந்தியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. காரணம் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அறிமுகமான ரெட்மி நோட் 12 சீரிஸ்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி சமீபத்தில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த தொடரில் தற்போது மேலும் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 12 டர்போ

வெய்போவில் உள்ள டிப்ஸ்டரின் தகவல்படி, வரவிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளமைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் கூடிய OLED பேனல் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றொரு வெய்போ தகவலில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போ என்ற பெயரில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் ரெட்மி நோட் 12 டர்போ குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Redmi Note 12 Turbo சிறப்பம்சங்கள்

Redmi Note 12 Turbo சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Redmi Note 12 Turbo ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வேரியண்ட் வரை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் 5500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் தகவல்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Redmi Note 12 விலை

ரெட்மி நிறுவனம் இந்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த தொடரில் Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ 5G ஆகிய மாடல்கள் இடம்பெற்றது. இதில் அடிப்படை மாடலாக ரெட்மி நோட் 12 இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது சிறந்த தேர்வாக இருக்கும். 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி போனின் விலை ரூ.16,499 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.18,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Another New Model in the Redmi Note 12 Series: Turbo Variant Launching Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X