ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி.?

|

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பதை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், எந்த அதிகாரியையும் பார்க்காமல் உட்கார்ந்த இடத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் எளிய வழி ஆன்லைன் மட்டுமே.

இணையதளம்

இணையதளம்

முதலில் தமிழ் நாடு தேர்தல் ஆணைய இணையதளம் செல்ல வேண்டும். இதற்கு இங்கு க்ளிக் செய்தால் போதுமானது.

ஆன்லைன்

ஆன்லைன்

தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ( Online Registration Facility ) என்பதை குறிப்பிடும் மஞ்சள் நிற லின்க் இனை க்ளிக் செய்ய வேண்டும்.

பதிவு

பதிவு

முன்பு க்ளிக் செய்த மஞ்சள் நிற லின்க் தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய பக்கத்தினை திறக்கும்.

ஃபார்ம் 6

ஃபார்ம் 6

தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் புதிய பக்கத்தில் ஃபார்ம் 6 என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது மற்றும் ஒரு புதிய பக்கத்தினை திறக்கும்.

தகவல்கள்

தகவல்கள்

புதிய பக்கத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இங்கு விண்ணப்ப தாரரின் தகவல்கள், பிறந்த இடம் சார்ந்த தகவல்கள், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், குடும்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரின் தகவல்கள் பதிவு செய்து, சான்றிதழ் பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உறுதி

உறுதி

முன்பு பதிவு செய்த தகவல்களை உறுதி செய்து கீழ் பகுதியில் இருக்கும் சமிர்பிக்க ( Submit ) கோரும் பட்டனை அழுத்த வேண்டும்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு

சமர்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்த 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு அலுவலர்கள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக வந்து நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்ப்பர், சரிபார்த்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து விடும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to Apply Voter Id in Tamil Nadu Online Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X