Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. அடுத்த Realme 5ஜி ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் தான் ரியல்மி பி4 லைட் 4ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்பாக ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. தற்போது இந்த போனின் விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் விவரக்குறிப்புகள் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பி4 லைட் 4ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. அடுத்த Realme 5ஜி ஸ்மார்ட்போன் ரெடி..

ரியல்மி பி4 லைட் 4ஜி அம்சங்கள் (Realme P4 Lite 4G specifications): ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 12எம்பி பிராசஸர் (Octa-Core UNISOC T7250 12nm processor) உடன் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 6.67-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1600 பிக்சல்ஸ், 563 நிட்ஸ் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பீச் கோல்ட், அப்சிடியன் பிளாக் மற்றும் சீ ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அதுவும் 13எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker), 3.5எம்எம் ஆடியோ ஜாக் வசதிகளுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவு இதில் உள்ளது. இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது புதிய ரியல்மி பி4 லைட் 4ஜி போன்.

மார்க்கெட்டே மிரள போகுது.. அடுத்த Realme 5ஜி ஸ்மார்ட்போன் ரெடி..

ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் 6300எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியம் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2 ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 லைட் 4ஜி போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 5G Teaser released: May launch in India soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X