வாங்குனா இதை வாங்கனும்.. 10 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் (Big Saving Days Sale) என்னும் சிறப்பு விற்பனை நடக்கிறது. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை விரும்பும் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான தள்ளுபடியில் இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி (Infinix Note 50s 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடியும் வழங்கப்பட்டு உள்ளது.
10 சதவீ தள்ளுபடி விலையில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.17,999 விலைக்கு இந்த இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. மேலும், ரூ.900 உடனடி தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.17,099 விலையில் இப்போது வாங்கி கொள்ளலாம்.

டைட்டானியம் கிரே (Titanium Grey), பர்கண்டி ரெட் (Burgundy Red), மரைன் டிரிஃப்ட் ப்ளூ (Marine Drift Blue) மற்றும் மிஸ்டிக் ப்ளம் (Mystic Plum) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இதில் மரைன் டிரிஃப்ட் ப்ளூ வேரியண்ட்டில் வீகன் லெதர் பேனல் கிடைக்கிறது. 7.65 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி வழங்கப்பட்டு உள்ளது. 180 கிராம் எடையில் லைட்-வெயிட்டில் கிடைக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50s 5G Specifications): 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவை இந்த நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், விலாக் வீடியோ, ஏஐ கேம்-போர்ட்ராய்டு பீச்சர்கள் உள்ளன.

சூப்பர் நைட், ஏஐ-ஜிக் போர்ட்ராய்டு, சூப்பர் மேக்ரோ போன்ற பீச்சர்களும் வழங்கப்பட்டு உள்ளன. 13 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2304Hz PWM டிம்மிங் உள்ளது.
மேலும், 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைத்துள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைத்து உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ப்ளோக்ஸ் ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. எக்ஸ்பூஸ்ட் கேம் மோட் (Xboost Game Mode) மற்றும் இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) பீச்சர்களையும் கொடுத்து உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஜேபிஎல் சவுண்ட் அவுட்புட் கொடுக்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. டிடிஎஸ் ஆடியோ (DTS Audio), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








