மார்ச்.17 க்கு குறிச்சாச்சு.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OIS, EIS கேமரா.. புது POCO போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) ஆகிய மாடல்களின் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க இருக்கும் சிப்செட்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் மார்ச் 17ஆம் தேதி இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. போகோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஆகியவை இதில் இருக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருப்பதும், ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலர்களில் கிடைக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக, குளோபல் மார்கெட்டில் இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு கிடைக்கும் சிப்செட்கள் உறுதி செய்யப்பட்டன. ஆகவே, இந்தியாவிலும் குளோபல் வெர்ஷனே வெளியாக இருப்பதால், அந்த சிப்செட்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். போகோ எக்ஸ்8 ப்ரோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 8500 Ultra) உள்ளது.
போகோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் கிடைக்க உள்ளது. ஏற்கனவே, இந்த மாடல்களானது, ரெட்மி டர்போ 5 (REDMI Turbo 5) மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (REDMI Turbo 5 MAX) ஆகிய மாடல்களின் குளோபல் வெர்ஷன் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது உறுதியாகிவிட்டது.
ஏனென்றால், ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் மற்றும் டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் சிப்செட் கொடுக்கப்பட்டது. அதேபோல டிசைனும் அப்படியே இருக்கிறது. ஆகவே, இந்த மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்க வேண்டி இருக்கிறது.
ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (REDMI Turbo 5 Specifications): 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7560mAh பேட்டரி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் உள்ளது. சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,000 பட்ஜெட்டில் இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம்.
ரெட்மி டர்போ 5 மேக்ஸ் அம்சங்கள் (REDMI Turbo 5 MAX Specifications): 6.83 இன்ச் (2772 x 1280 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி மெயின், 8 எம்பி அல்ட்ரா வைடு, 20 எம்பி செல்பீ உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9000mAh பேட்டரி கொடுத்து உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட சீன வேரியண்ட்டின் விலை ரூ.34,000 பட்ஜெட்டில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








