இந்திய மார்க்கெட்டே மிரளுது.. 10001mAh பேட்டரி, IP69 ரேட்டிங்.. SONY கேமரா உடன் புதிய Realme போன் விற்பனைக்கு!
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 10001mAh பேட்டரியுடன் வெளியாகிய ரியல்மி நார்சோ பவர் 5ஜி (Realme NARZO Power 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை ரூ.3,000 தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. IP69 ரேட்டிங், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுக்கிறது.
மார்ச் 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை, இன்று அமோசான் தளத்தில் தொடங்கி உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆகவும் இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.23,999 விலைக்கு இந்த ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.3,250 தள்ளுபடி கிடைக்கும். ரூ.25,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த மாடலுக்கு கிடைக்கிறது.
6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை உள்ளது. பெரிய பேட்டரி கிடைப்பதால், 4 வருடங்களுக்கு பேட்டரி வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வாரண்டின் மதிப்பு ரூ.2,999ஆக இருக்கிறது. டைட்டன் சில்வர் (Titan Silver) அல்லது டைட்டன் ப்ளூ (Titan Blue) ஆகிய 2 கலர்களில் இந்த ரியல்மி நார்சோ பவர் 5ஜி மாடலை வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ பவர் 5ஜி அம்சங்கள் (Realme NARZO Power 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுக்கும் 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. அவுட்டோருக்கு ஏற்ப 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 1.5K ரெசொலூஷன் உள்ளது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா (Octa Core 4nm MediaTek Dimensity 7400 Ultra) சிப்செட் உள்ளது. இந்த சிப்செட்டுடன் ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் (Hyber Vision+ AI Chip) கொடுக்கப்பட்டு உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கான அவுட்புட் கொடுக்க இந்த கூடுதல் சிப்செட் உள்ளது. 90எப்பிஎஸ் கேமிங் அவுட் கிடைக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. மூன்று ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்கிறது. 7000எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் (AirFlow VC Cooling System) கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2 ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10001mAh பேட்டரி உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications








