Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது ரியல்மி போன்.. 6300mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நோட் 80 (Realme Note 80) ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். 6300எம்ஏஎச் பேட்டரி, யுனிசாக் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி நோட் 80 அம்சங்கள் (Realme Note 80 specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சத்தமின்றி அறிமுகமானது புது ரியல்மி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஆக்டா கோர் யுனிசாக் டி7250 சிப்செட் (octa core Unisoc T7250 chipset)உடன் ரியல்மி நோட் 80 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Arm மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

எல்இடி பிளாஸ் ஆதரவுடன் 8எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி உடன் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், கலர் டெம்பரேச்சர் சென்சார், இ-காம்பஸ், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகள் இந்த போனில் உள்ளன.

6300எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

Realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5.2. யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நோட் 80 போனின் விலை IDR 16,99,000 (இந்திய மதிப்பில் ரூ.9,000)-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை IDR 19,99,000 (இந்திய மதிப்பில் ரூ.11,000)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Note 80 with 6300mAh battery launched : check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X