யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

|

எல்லோரும், எல்லோரிடமும், எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஏனெனில் நம்மில் பலருக்கும் "உருப்படியாக" சில விடயங்கள் மட்டுமே நன்றாக தெரியும். அதையும் அடுத்தவருக்கு சொல்லிக்கொடுத்து விட்டால் - நம்ம கதை அவ்ளோதான்!

ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்தால் தான், அடுத்தடுத்த விடயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வரும்.

அந்த அடிப்படையின் கீழ் தான், எங்களுக்கு தெரிந்த எல்லா டெக் டிப்ஸ்களையும் உங்களிடம் பகிர்வதை ஒரு "தொழிலாகவே" வைத்துள்ளோம்!

பலருக்கும் தெரியாத ட்ரூகாலர் டிப்ஸ்!

பலருக்கும் தெரியாத ட்ரூகாலர் டிப்ஸ்!

அடையாளம் தெரியாத மொபைல் நம்பர்களிடம் இருந்து வரும் கால்களை 'அட்டென்ட்' செய்யாமல் எஸ்கேப் ஆவதற்கும், சில (தெரியாத) நம்பரில் இருந்து யார் அழைக்கிறார்கள் என்பதை முன்னரே அறிந்து கொள்வதற்கும் கைகொடுக்கும் ஒரு ஆப் தான் - ட்ரூகாலர்!

அப்படியான ட்ரூகாலர் ஆப்பில் உள்ள ஒரு "Hide" அம்சத்தை பற்றியும், அதில் உள்ள ஒரு சிக்கலை பற்றியும் தான் நாம் விரிவாக பார்க்க போகிறோம்!

இப்போ போன் பண்ணா எடுப்பாங்களா?

இப்போ போன் பண்ணா எடுப்பாங்களா?

ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் அதில் Availability என்கிற ஒரு அம்சம் உள்ளதென்று!

அதாவது இப்போது போன் செய்தால் எடுப்பாங்களா? இல்ல வேறு யாருடனோ பேசிக்கொண்டு பிஸியாக இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க உதவும் அம்சம் தான் Availability!

78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

ஒருவர் ஃப்ரீயாக இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி ?

ஒருவர் ஃப்ரீயாக இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி ?

நீங்கள் அழைக்க விரும்பும் நம்பருக்கு அருகில் "சிவப்பு நிற பெல்" ஐகானை நீங்கள் கண்டால், அவர் தனது ஸ்மார்ட்போனை சைலன்ட் மோட்-இல் வைத்து உள்ளார் என்று அர்த்தம்.

ஒருவேளை நீங்கள் "சிவப்பு நிற போன்" ஐகானை கண்டால், அந்த நபர் வேறொரு அழைப்பில் இருக்கிறார் என்று அர்த்தம்.

இதே போல அவர் கடைசியாக எப்போது ட்ரூகாலர் ஆப்பிற்குள் வந்து சென்றார் என்கிற விவரத்தை வழங்கும் 'லாஸ்ட் சீன்' விவரத்தையும் நீங்கள் பார்க்கலாம் (அதாவது வாட்ஸ்அப்பில் இருப்பது போலவே)!

ஆனால் ஒரு கண்டிஷன்!

ஆனால் ஒரு கண்டிஷன்!

மேற்கண்ட Availability விருப்பங்களை பெற நீங்கள் ஒரு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள மற்றும் ஆப்பில் ஆக்டிவ் ஆக உள்ள ட்ரூகாலர் யூசராக இருக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான நிபந்தனையும் உள்ளது.

அது என்னவென்றால், ஒருவரின் Availability-ஐ காண அவர் தன் ஸ்மார்ட்போனில் ட்ரூகாலர் ஆப்பை 'இன்ஸ்டால்' செய்து இருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட Availability அம்சத்தை 'ஆன்' செய்து வைத்திருக்க வேண்டும் (இது டீபால்ட் ஆக இயக்கப்பட்டு இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது)

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான சிக்கல் உருவாகும்!

இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான சிக்கல் உருவாகும்!

அது ப்ரைவஸி தொடர்பான சிக்கல் ஆகும்!

ஆம், நீங்கள் பிஸியாக இருக்கிறீர்களா? அல்லது ஃப்ரீயாக இருக்கிறீர்களா? என்பதை அடுத்தவருக்கு தெரியப்படுத்தும் ஒரு ட்ரூகாலர் அம்சம் இருந்தால் அது உங்களின் "தனியுரிமை" தொடர்பான சிக்கலை ஏற்படுத்தலாம் இல்லையா?

முன்னரே குறிப்பிட்டப்படி, ட்ரூகாலர் ஆப்பில் உள்ள இந்த அம்சம் டீபால்ட் ஆக 'ஆன்' செய்யப்பட்டு இருக்கும். ஒருவேளை நீங்கள் இந்த அம்சத்தை ஆஃப் செய்து வைக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

ட்ரூகாலர் ஆப்பில் உள்ள Last Seen அம்சத்தை

ட்ரூகாலர் ஆப்பில் உள்ள Last Seen அம்சத்தை "மறைப்பது" எப்படி?

- லாஸ்ட் சீன் விவரங்களை வெளிப்படுத்தும் Availability அம்சத்தை முடக்க, முதலில் உங்கள் ட்ரூ காலர் ஆப்பை திறக்கவும்.

- பிறகு ஆப்பின் வலதுபுறத்தில் உள்ள, த்ரீ டாட்ஸ் (மூன்று புள்ளிகள்) ஐகானை கிளிக் செய்யவும்

- அதனுள் Settings (செட்டிங்ஸ்) ஆப்ஷனை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்

- பின்னர் Privacy (ப்ரைவஸி) ஆப்ஷனுக்குள் நுழையவும்.

- இப்போது Availability என்கிற ஆப்ஷனை தேடி கண்டுபிடிக்கவும், பின்னர் அதை ஆஃப் செய்யவும், அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Hide Last Seen Feature in Truecaller App Using This Simple Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X