புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!

|

சுருக்கமாக விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு, நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்லது நடந்துள்ளது. உடனே 5ஜி அறிமுகம் குறித்த தகவல் வெளியாகிவிட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்; இது 5ஜி பற்றியது அல்ல, 5ஜிபி பற்றியது!

மனதை தேற்றிக்கொள்ள உதவும் ஒரு ஆபர்!

ஒருபக்கம் - பார்தி ஏர்டெல்லும், ரிலையன்ஸ் ஜியோவும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் 5ஜி சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து வருகின்றன.

Vodafone அறிவித்துள்ள 5GB இலவச டேட்டா ஆபர்.. பெறுவது எப்படி?

மறுபக்கம் - வோடபோன் ஐடியாவானது 5ஜி அறிமுகம் குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை. இந்நிலையில் தான் வோடபோன் ஐடியாவின் அனைத்து ப்ரீபெய்ட் கஸ்டமர்ககளும் தங்கள் மனதை தேற்றிக்கொள்ள உதவும் படியான ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன ஆபர்?

வோடாடோன் ஐடியாவானது, அதன் ப்ரீபெய்டு (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு குடியரசு தின சலுகை (Republic Day Offer) ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகை வருகிற பிப்ரவரி 7, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!

இந்த சலுகையின் கீழ் வோடபோன் ஐடியாவின் அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் 2ஜிபி முதல் 5ஜிபி வரையிலான இலவச டேட்டா (Free Data) கிடைக்கும்.

மேலும் இந்த இலவச டேட்டா நன்மையானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் என்பதையும் வோடபோன் ஐடியா உறுதி செய்துள்ளது.

அதாவது, இந்த சலுகையின் கீழ் உங்களுக்கு கிடைக்கும் இலவச டேட்டாவை 28 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்; இல்லையென்றால் அது காலாவதியாகி விடும்!

5ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

வோடாபோன் ஐடியா வழங்கும் இலவச டேட்டாவை பெற, உங்கள் மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அதாவது ரூ.199 முதல் ரூ.299 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 9 திட்டங்களை தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு 2ஜிபி அளவிலான இலவச டேட்டா கிடைக்கும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.199, ரூ.209, ரூ.219, ரூ.239, ரூ.249, ரூ.269, ரூ.279, ரூ.298 மற்றும் ரூ.299 போன்ற திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்.

ஒருவேளை ரூ.299 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால்?

ரூ.299 க்கு மேல் உள்ள வோடாபோன் ஐடியா திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு 5ஜிபி அளவிலான இலவச டேட்டா கிடைக்கும்.

நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த சலுகை வோடாபோன் ஐடியாவின் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் இந்த சலுகை பிப்ரவரி 7, 2023 வரை மட்டுமே அணுக கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விஐ ஆப் (Vi App) வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 2ஜிபி அல்லது 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்!

Vodafone அறிவித்துள்ள 5GB இலவச டேட்டா ஆபர்.. பெறுவது எப்படி?

விஐ ஆப் வழியாக ரீசார்ஜ் செய்து இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள விஐ ஆப்பை (Vi App) திறக்கவும்; ஒருவேளை உங்களிடம் விஐ ஆப் இல்லையென்றால், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து வோடபோன் ஐடியாவின் விஐ ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.

பின்னர் உங்கள் விஐ மொபைல் நம்பரை பயன்படுத்தி ஆப்பிற்கு லாக்-இன் (Log-in) செய்யவும்

உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்ந்தெடுக்கவும் (மீண்டும் நினைவூட்டும் வண்ணம் ரூ.199 முதல் ரூ.299 க்குள் இருக்கும் திட்டத்தை தேர்வு செய்தால் 2ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்; ரூ.299 க்கு மேல் மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்)

தேவையான திட்டத்தை தேர்வு செய்த பின்னர், உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை (Payment Mode) தேர்ந்தெடுத்து, பணம் செலுத்தவும்; அவ்வளவு தான்!

நீங்கள் பணம் செலுத்தியதும், உங்கள் ரீசார்ஜ் மதிப்பின் அடிப்படையில் 5ஜிபி அல்லது 2ஜிபி அளவிலான இலவச டேட்டா உங்களுக்கு கிரெடிட் செய்யப்படும்; கூடவே நீங்கள் ரீசார்ஜ் செய்த திட்டமும் ஆக்டிவேட் ஆகும்!

Best Mobiles in India

English summary
5GB Free Data For All Prepaid Customers Vodafone Idea Announced New 2023 Offer How to Avail

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X