2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.!

|

எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் மற்றும் சவுகரியமாக இருத்தல் போன்றவற்றால், மொபைலில் கேம் விளையாடுவது என்பது சில கேமிங் பிரியர்களுக்கு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது.

2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.!

ஸ்மார்ட்போன்களில் கேமிங் சவுகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, போன் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது போன்களின் ரேம், ப்ராஸ்சஸ்சர் மற்றும் கிராப்பிக்ஸ் அம்சங்களை மேம்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நவீன மேம்பாடுகளால், உயர்ரக கேம்கள் கூட போன்களில் சாத்தியமாகியுள்ளது. அந்தவகையில் 2018ஆம் ஆண்டு நாம் விளையாடி மகிழ்ந்த சிறந்த மொபைல் கேம்களின் பட்டியல் இதோ.

பப்ஜி மொபைல்(PUBG MOBILE)

பப்ஜி மொபைல்(PUBG MOBILE)

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரு தளங்களிலும் கிடைக்கும் முதல் பர்சன் மொபைல் கேம் பப்ஜி. 2018ல் அதிக டவுன்லோட் செய்த மற்றும் அதிகம் விளையாடிய கேம்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி 2018ன் சிறந்த ஆண்ராய்டு கேம் என விருதையும் கூகுள் ப்ளே வழங்கியுள்ளது. ப்ளேயர் அன்னோன்ஸ் பேட்டில் கிரவுண்ட் என பெயர் விரிவாக்கம் கொண்ட கேமில், போட்ஸ் உள்பட் 100 ப்ளேயர்களுடன் ஆன்லைனில் விளையாட வேண்டும். கடைசி வரை இருக்கும் வீரர் அல்லது குழு சிக்கன் டின்னர் வென்ற அணியாக இருக்கும்.

இரான்கில், மிராமர், சேன்ஹாக் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விகென்டி உள்ளிட்ட 4 மேப்கள் இந்த பப்ஜி கேமில் உள்ளது. அடிப்படையில் பரபரப்பான சூட்டர் கேமான இதில், எதிரிகள் எங்கிருந்து குறிவைத்து உங்களை தாக்குகின்றனர் என்பது தெரியாது. அதை கண்டறிந்து உங்களை கொல்லும் முன்பு அவர்களை சூட்டு வீழ்த்தவேண்டும்.

இன்டூ தி டெத் 2(INTO THE DEAD 2)

இன்டூ தி டெத் 2(INTO THE DEAD 2)

உங்கள் குடும்பத்தை காப்பாற்ற ஜோம்பி(Zombie) கூட்டம் வழியாக செய்யும் பயணம் தான் இந்த கேம். உயிர்வாழ்வதற்காக எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெட்டு, துண்டாக்கு, இறந்தவர்களை படுகொலை செய் - தொடர்ந்து முன்னேறு. இது யாருமே பாதுகாப்பில்லாத உலகம்.

கேமின் அம்சங்கள்:

*தொடரும் கதை மற்றும் பல முடிவுகள் - முழுமையான 7 ஆக்சன் நிரம்பிய அத்தியாயங்கள், 60 நிலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சவால்கள்

*சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் ammo சலுகைகள் மூலம்மிலே ஆயுதங்கள்,துப்பாக்கி, வெடிபொருட்கள், மற்றும் இன்னும் பலவற்றை அன்லாக் மற்றும் அப்டேட் செய்தல்

*பல்வேறு விளையாட்டுக்கள் - இராணுவ துப்பாக்கிப் பிரயோகங்களில் இருந்து வரும் தீ, வாகனங்களின் மேல் இருந்து கடத்தலைக் தடுத்தல், அவர்களை உயிருடன் தக்கவைத்தல் அல்லது கொல்லுதல்

*பல, அதிவேக சூழல்கள் - எண்ணெய் வயல்கள் மற்றும் இராணுவத் தளங்களில் இருந்து முகாம்கள், கிராமப்புற விவசாய சமூகங்கள் என பல்வேறு இடங்களைக் காணலாம்

* எப்போதும் அதிகரிக்கும் ஜாம்பி அச்சுறுத்தல்கள் - கவசங்களை அணிந்த தந்திரங்கள் மூலம் ஜோம்பிக்களை அழித்தல்

• தினசரி மற்றும் சிறப்பு நிகழ்வுகள் - உங்கள் திறமையை நிரூபித்து பிரத்தியேக பரிசுகள் பெறுதல்

• விசுவாசமான கேசன் தோழர்கள் - ஜோம்பிஸ் இடம் தப்பி மற்றும் பாதுகாப்பாக இருத்தல்

போக்கிமான் கோ(POKÉMON GO)

போக்கிமான் கோ(POKÉMON GO)

2018ல் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது போக்கிமான் கோ. இந்த கேமில் ஸ்மார்ட்போன் கேமராக்கள் மூலம் போக்கிமான தீம் உள்ள அனுபவத்தை உருவாக்கப்படும். பல்வேறு போக்கிமான்கள் உண்மையான உலகில் தோன்றுவதை கேமரா லென்ஸ் மூலம் ப்ளேயர்கள் காணலாம். அவற்றை பிடித்து பல்வேறு இடங்களில் காணப்படும் ஜிம்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கேம் தற்போது டிரைனர் பேட்டல் அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகிலுள்ள மற்ற டிரைனர்களுடன் ஒன்-டூ-ஒன் மற்றும் ஸ்பார்க், கேன்டிலா மற்றும் ப்ளான்சீ டீம் லீடர்களுக்கு எதிராக ப்ராக்டிஸ் பேட்டல்களும் விளையாட முடியும்.

ஆஸ்பால்ட்9 :லெஜென்ட்ஸ் (ASPHALT 9: LEGENDS)

ஆஸ்பால்ட்9 :லெஜென்ட்ஸ் (ASPHALT 9: LEGENDS)

மிகவும் பிரபலமான கார் ரேசிங் கேமான இதன் புதிய வெர்சனில், கிராபிக்ஸை மேம்படுத்தி பல புதிய ரேசிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கேமில் பெர்ராரி, போர்சே, லம்போர்கினி போன்ற பல ஹைபர்கார்களை பயன்படுத்தலாம்.

வேறு எந்தவொரு ஆஸ்பால்ட் கேமிலும் இல்லாத வகையில், ஒத்த கருத்துடைய ரேஸ் நண்பர்களை இணைத்து ஆன்லைன் கிளப்பை உருவாக்கலாம். ரேஸ்களில் சிறப்பாக விளையாடி பெஸ்ட் மைல்ஸ்டோன் ரிவார்டுகளை அன்லாக் செய்யலாம்.

டிராகன் பால் லெஜன்ட்ஸ்(DRAGON BALL LEGENDS)

டிராகன் பால் லெஜன்ட்ஸ்(DRAGON BALL LEGENDS)

கடந்த சில ஆண்டுகளாக டிராகன் பால் தொடர் அதிலும் குறிப்பாக 'தி ஹீரோயிஸ்' அதிக கவனத்தை ஈர்த்தது. மிகவும் வேடிக்கையான இந்த விளையாட்டில், உயர்தரமான முப்பரிமாண நிலைகளால் கதாபாத்திரங்களின் குரலுடன் ப்ளேயர்கள் போரிட முடியும். உலகம் முழுவதும் உள்ள எதிர் ப்ளேயர்களுடன் 1 டூ 1 ஆகவும் விளையாட முடியும்.

*இதில் உங்களுக்கு விருப்பமான ஃபைட்டர்களை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

*ஆயுதங்களை எளிதாக கையாளலாம்.

*உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் ரியல் டைம் போர் புரியலாம்.

*அகிரா டோரியாமா வடிவமைக்கும் அனைத்து புதிய கதாபாத்திரங்களாகவும் விளையாடலாம்.

க்ளாஸ் ஆப் க்ளேன்(Clash of clans)

க்ளாஸ் ஆப் க்ளேன்(Clash of clans)

இலவசமாக டவுன்லோட் செய்து விளையாடும் இந்த கேமில், சில கேம் உபகரணங்களை பணம் கொடுத்தும் வாங்கும் வசதியும் உள்ளது.அந்த வசதியை பயன்படுத்த விரும்பவில்லை எனில், செட்டிங்ஸ் பகுதியில் 'in-app purchases' ஐ முடக்கி வைக்கவேண்டும். இந்த கேம் ஆண்ராய்டு மற்றும் ஐ ஓஎஸ்-ல் ஏராளமான முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமில், உலகம்முழுவதும் மில்லியன் ஆப் ப்ளேயர்ஸ் ஆக இணைந்து உங்களின் சொந்த கிராமத்தை கட்டமைத்து, படையை திரட்டி, போர்களை வெல்ல வேண்டும்.

 சாக்கர் 2018(PRO EVOLUTION SOCCER -PES 2018)

சாக்கர் 2018(PRO EVOLUTION SOCCER -PES 2018)

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து இரசிகர்கள் மத்தியில் இந்த விளையாட்டு மிகவும் விரும்பப்படுகிறது. காலங்காலமாக கணிணி மற்றும் ப்ளேஸ்டேசனில் மட்டுமே விளையாடி வந்த இந்த கேமை, தற்போது ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8000க்கும் மேற்பட்ட அனிமேசன் ப்ளேயர்கள், ப்ளே ஸ்டைல்கள் மற்றும் அனைத்தும் உண்மையானதை போலவே இருக்கும்.

PES2019 மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுடன் விளையாட முடியும். மேலும் இதில் ப்ளேயர்களின் பர்ஸ்னாலிட்டியும் தனித்துவமானதாக உள்ளது.

ப்ளேண்ட்ஸ் vs ஜோம்பிஸ்2(PLANTS VS ZOMBIES 2)

ப்ளேண்ட்ஸ் vs ஜோம்பிஸ்2(PLANTS VS ZOMBIES 2)

வெற்றி-மூலோபாய சாகசமான இதில், நாட்கள் முடிவடையும் நேரம் வரை விழித்துக்கொண்டிருக்கும் பெருங்களிப்புடைய ஜோம்பிஸ்-ஐ நீங்கள் சந்திக்கும் போது வரவேற்று தோற்கடிக்க வேண்டும். அற்புதமான தாவரங்களின் ஒரு இராணுவத்தை உண்டாக்கி, தாவர உணவு அளித்து அவற்றின் சக்தியை அதிகரித்து, உங்கள் மூளைகயை பாதுகாக்க சிறப்பான திட்டம் வகுக்கவேண்டும்.

இந்த விளையாட்டில், நீங்கள் கவனமாக உங்கள் தோட்டத்தை கட்டமைக்க வேண்டும். ஜோம்பிஸ் உங்கள் மூளையை சாப்பிடுவதற்கு முன்பு, அவற்றை படுகொலை செய்யும் வகையில் நீங்கள் உங்கள் தோட்டத்தில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இந்த ஆண்டு அதிக கவனத்தை பெற்ற இந்த விளையாட்டை, நீங்கள் ஒரு அதிரடி மற்றும் சாகச விளையாட்டுகளின் காதலன் இல்லை என்றால், தேர்ந்தெடுத்து தேவையான உத்திகள் மூலம் வெல்ல முடியும்.

ஆல்டோஸ் ஒடிசி (ALTO’S ODYSSEY)

ஆல்டோஸ் ஒடிசி (ALTO’S ODYSSEY)

இந்த கேமில் ஆல்ட்டோவும் அவரது நண்பர்களும், முடிவில்லா சாண்ட் போர்டிங் பயணம் மேற்கொண்டு கேமின் இரகசியங்களை கண்டுபிடிப்பர். காற்றழுத்தத் தொட்டிகளைக் கடந்து, தூரநோக்குமிக்க பள்ளத்தாக்குகளைத் தாண்டி, வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மறைந்த கோயில்களை ஆராயவேண்டும்.

முதிலில் ஐஓஎஸ் வெளியிடப்பட்ட இந்த கேம் பின்னர் ஆண்ராய்டில் கிடைக்கப்பெற்றது. இதுவும் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய கேம். ஆல்டோவின் இதயத்தில் ஒரு தொடர் நேர்த்தியான தொடு தந்திரம் அமைப்பு உள்ளது. சங்கிலிகளை ஒன்றாக இணைத்து 180 கோல்களையும் உள்ளுணர்வு கட்டுப்பாடுகளுடன் முடிக்கவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 Best Mobile Games of 2018 Which you must play: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X