Home
Mobile

11000mAh பேட்டரி கொண்ட புது போன்.. OnePlus, Realme வயிற்றில் புளியை கரைத்த HONOR நிறுவனம்.. எந்த மாடல்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹானர் (Honor) நிறுவனமானது அதன் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் ஒரு பிரம்மாண்டமான 10,080mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவை பேக் செய்ததை நாம் பார்த்தோம். இப்போது, ​​சீனாவிலிருந்து வெளியான ஒரு புதிய லீக் தகவலின்படி, ஹானர் நிறுவனம் இதைவிட இன்னும் அதிக பேட்டரி திறன் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போனுக்கான சோதனை உற்பத்தி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஹானர் நிறுவனம் 10,690mAh மதிப்பிடப்பட்ட திறன் மற்றும் 11,000mAh வழக்கமான திறன் கொண்ட ஒரு புதிய பேட்டரியின் சோதனை உற்பத்தியை தொடங்கியுள்ளது.

11000mAh பேட்டரி கொண்ட புது Honor போன்.. எந்த மாடல்?

இது உண்மையாகும் பட்சத்தில், ஒரு பிரதான ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்பட்டதிலேயே அதிக திறன் கொண்ட பேட்டரிகளில் இதுவும் ஒன்றாக அமையும். உருவாக்கத்தில் உள்ள இந்த ஹானர் ஸ்மார்ட்போனின் சரியான மாடல் பெயரை குறிப்பிட்ட டிப்ஸ்டர் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஹானர் பவர் 2 மாடலின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆக வர அதிக வாய்ப்புள்ளது; அதாவது இது பெரும்பாலும் ஹானர் பவர் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

ஹானரை தவிர, ரியல்மி, ஒன்பிளஸ் மற்றும் விவோ போன்ற பிற ஆண்ட்ராய்டு பிராண்டுகளும் சமீபத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளன. ஒன்பிளஸின் சமீபத்திய அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலில் 9,000mAh பேட்டரி உள்ளது. இதேபோல ரியல்மியின் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போன் 8,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இப்போது உள்ள ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 10,080mAh பேட்டரி, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 14.2 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும், 17.3 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தையும் வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதற்கும் முன்னதாக அறிமுகம் ஆன ஹானரின் வின் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 16.4 மணிநேரம் வரை தொடர்ச்சியான கேமிங் நேரத்தையும், 31.3 மணிநேரம் வீடியோ ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டாண்டர்ட் ஹானர் வின் மாடல் ஆனது 80W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.79-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்களை கொண்டுள்ளது. இதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா, 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ஹானரின் வின் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, 6.83-இன்ச் டிஸ்ப்ளே, 50-மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்கள் மற்றும் 50-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஹானர் வின் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டில் இயங்குகிறது, அதே சமயம் வின் ஆர்டி மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Reportedly To Launch 11000mAh Battery Phone Coule be Honor Power Series Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X