திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?

|

இந்திய சந்தையில் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது பெரிய திரை உடன் மேம்பட்ட அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

ஆனாலும் சோனி, எல்ஜி, சாம்சங் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை ரூ.60,000-க்கு தான் விற்பனை செய்கின்றன. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் சோனி, எல்ஜி, சாம்சங் போன்ற முக்கியமான நிறுவனங்களுக்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் பெரிய பெரிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் 55 Y1S Pro எனும் ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி!

தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை?

ஒன்பிளஸ் 55 Y1S Pro எனும் ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் தளத்தில் ரூ.39,999-க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்

இந்த ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ ஆனது 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் 10-பிட் கலர் டெப்த் வசதி இருப்பதால் தெளிவாக நிறங்கள் பார்க்க முடியும். அதேபோல் தெளிவான வீடியோவை காண உதவுகிறது இந்த அட்டகாச தொழில்நுட்பம். சுருக்கமாக கூறவேண்டும் என்றார் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

அதேபோல் இந்த 55-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது real-time image quality optimisation மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் தெளிவான உள்ளடக்கத்தை வழங்க காட்சிகளை ஸ்மார்ட் ட்யூன் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி!

இந்த OnePlus TV 55 Y1S Pro ஆனது HDR10+, HDR10 மற்றும் HFL ஃபார்மேட்-ஐ ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயங்குகிறது. பின்பு இதில் OnePlus Connect 2.0 பயன்பாட்டுடன் கிட்ஸ் மோட் அம்சம் உள்ளது. மேலும் நீங்கள் இந்த புதிய OnePlus டிவியை OnePlus பட்ஸுடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் OnePlus Connect software (2.0) உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை இந்த டிவியுடன் இணைக்கலாம். அதாவது இந்த டிவியை இயக்குவது மற்றும் ஆஃப் செய்வதற்கு ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பயன்படுத்தலாம். குறிப்பாக இதுபோன்ற அம்சங்களைத் தான் பயனர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.

ஆடியோ எப்படி?

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் OxygenPlay 2.0 வசதியைக் கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி!

வாங்குவது நல்லது

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக நீங்கள் பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால், இந்த ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
Suddenly OnePlus TV 55 Y1S Pro model is in high demand Why: Let's see in detail here: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X