பேரு Fastrack நியாபகம் இருக்கா? வெறும் ரூ.1495க்கு அறிமுகமான அட்டகாச ஸ்மார்ட்வாட்ச்: உச்சக்கட்ட சம்பவம்!

|

ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும் வகையில், Fastrack Reflex Beat+ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டால் யோசிக்காமல் இந்த Fastrack வாட்ச்சை வாங்கலாம். Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச்சை அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சலுகையுடன் இதை வாங்கலாம்.

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச்

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச்

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச் ஆனது பீஜ் லேட், ஒயின் ரெட், பிளாக், ஆலிவ் க்ரீன் மற்றும் டீப் டீல் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.69 இன்ச் அல்ட்ராVu டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 60 மல்டி-ஸ்போர்ட்ஸ் பயன்முறை ஆதரவு இதில் உள்ளது.

ஃபாஸ்ட் டிராக் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்வாட்ச்

ஃபாஸ்ட் டிராக் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்வாட்ச்

பிரபல கைக்கடிகார நிறுவனமான ஃபாஸ்ட் டிராக் புதிய ஸ்மார்ட்வாட்ச்சை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும் விதமாக Fastrack Reflex Beat+ வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மலிவு விலையில் கிடைக்கிறது. ரிஃப்ளெக்ஸ் பீட்+ ஆனது பெரிய காட்சி ஆதரவைக் கொண்டிருக்கிறது. முன்னதாக அறிமுகமான பல ஃபிட்னஸ் பேண்டுகளில் இருந்து இது வேறுபட்டு இருக்கிறது.

1.69 இன்ச் UltraVu டிஸ்ப்ளே

1.69 இன்ச் UltraVu டிஸ்ப்ளே

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.69 இன்ச் UltraVu டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதீத அனுபவத்தை வழங்கும் வகையிலான 60hz மற்றும் 500 nits உச்ச பிரகாச திறன் கொண்ட ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே.

அதிக ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் உணர்வு

அதிக ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் உணர்வு

Titan Company Limited, COO Wearables Digital Health Innovator ரவி குப்புராஜ் இதுகுறித்து கூறுகையில், Amazon Fashion உடனான பிரத்யேக கூட்டாண்மையில் எங்கள் முதல் மலிவு விலை Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச்சை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஒரு சாதனமாக ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது. அதிக ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் உணர்வுள்ள பார்வையாளர்களை எங்கள் புதிய அறிமுகம் சென்றடையும்.

அமேசான் ஃபேஷனுடன் எங்கள் புதிய அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். Reflex Beat+ அனைத்து தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்" என கூறியுள்ளனர்.

Fastrack Reflex Beat+ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Fastrack Reflex Beat+ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச் இன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் Fastrack Reflex Beat+ ஆனது ரூ.1495 என மலிவு விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் ஆனது பீஜ் லேட், ஒயின் ரெட், பிளாக், ஆலிவ் க்ரீன் மற்றும் டீப் டீல் உள்ளிட்ட 5 வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Fastrack Reflex Beat+ சிறப்பம்சங்கள்

Fastrack Reflex Beat+ சிறப்பம்சங்கள்

Fastrack Reflex Beat+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.69 இன்ச் UltraVu டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த வாட்ச் 60 மல்டி ஸ்போர்ட்ஸ் பயன்முறை அணுகலைக் கொண்டிருக்கிறது. ஹார்ட் ரேட் மானிட்டர், வுமன் ஹெல்த் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் என பல ஆரோக்கிய ஆதரவு அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

IP68 மதிப்பீடு

IP68 மதிப்பீடு

இந்த ஸ்மார்ட்வாட்ச் ரிஃப்ளெக்ஸ் பீட்+ இன் சிலிக்கான் ஸ்ட்ராப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் இருக்கமாக பொருத்தக்கூடிய தன்மை இதில் இருக்கிறது. 60 மல்டி ஸ்போர்ட்ஸ் பயன்முறை மற்றும் IP68 மதிப்பீடு இதில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஏணைய விளையாட்டுகள் மற்றும் சாகசங்களுக்கும் சிறந்த அணியக் கூடிய சாதனமாக இது இருக்கும்.

Fastrack Reflex Beat+ ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஏணைய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட கிளவுட் வாட்ச்ஃ பேஸ்களை இதில் வழங்குகிறது. பீஜ் லேட், ஒயின் ரெட், பிளாக், ஆலிவ் க்ரீன் மற்றும் டீப் டீல் உள்ளிட்ட 5 வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

கேமரா கட்டுப்பாடு மற்றும் இசை கட்டுப்பாடு

கேமரா கட்டுப்பாடு மற்றும் இசை கட்டுப்பாடு

கூடுதலாக இந்த ஸ்மார்ட்வாட்ச் கேமரா கட்டுப்பாடு மற்றும் இசை கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பயணத்தின் போது பயனர்கள் அறிவிப்பு விழிப்பூட்டல்களைப் பெறவும், அழைப்புகளை நிராகரிக்கவும் இது அனுமதிக்கிறது. வானிலை நினைவூட்டல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் பெறலாம். எனவே நீங்கள் எங்கு பயணத்தை தொடங்கினாலும் காலநிலை குறித்து கவலைப்பட தேவையில்லை.

Best Mobiles in India

English summary
Rs.1495 price Fastrack Reflex Beat+ SmartWatch Launched in India: 1.69inch UltraVu Display, 60 multi Sports and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X