OnePlus ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் வேணுமா? ஒன்பிளஸ் 8 போனுடன் ரசிகர்களை டீஸ் செய்த பெயின்!

|

தற்போதைய காலகட்டத்தில் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் என்பது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது. இதை நன்கு உணர்ந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய புதிய பவர் பேங்க் மாடலை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் பவர் பேங்க்

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் பவர் பேங்க்

ஒன்ப்ளஸ் நிறுவனம், தனது புதிய ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ப்ரோ மாடல், 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்பொழுது, ஒன்பிளஸ் நிறுவனம் இத்துடன் பவர் பேங்க் மாடலையும் வெளியிடக்கூடும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெயின் சமீபத்திய ட்வீட்-ல் தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் மிரட்டலான பவர் பேங்க்

ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் மிரட்டலான பவர் பேங்க்

ஒன்பிளஸ் நிறுவனம், தனது பிராண்டட் பவர் பேங்க் சாதனத்தை விரைவில் வெளியிட தயாராக உள்ளது என்று நிறுவனத்தின் சார்பில் சில வலைத்தள பதிவுகள் குறிப்பிடுகின்றன. 'அதுவும் நீங்கள் நினைத்து பார்த்திடாத ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் மிரட்டலான அதிவேகமாக சார்ஜிங் பவர் பேங்க் சாதனத்தை பார்க்க தயாரா' என்று பெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

மௌனமாகத் தகவலை தன் கைக்குள் வைத்துள்ள ஒன்பிளஸ்

மௌனமாகத் தகவலை தன் கைக்குள் வைத்துள்ள ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் பவர் பேங்க் வெளியிடப்படும் என்ற தகவலை மட்டும் ஒன்பிளஸ் நிறுவனம் சூட்சமமாகத் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் பற்றிய சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை பற்றிய விபரங்களை வெளியிடாமல் ஒன்பிளஸ் நிறுவனம் மௌனமாகத் தகவலை தன் கைக்குள் பாதுகாத்து வைத்துள்ளது.

மீண்டும் பவர் பேங்க் தயாரிப்பில் ஒன்பிளஸ்

மீண்டும் பவர் பேங்க் தயாரிப்பில் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் 2015 ஆம் ஆண்டில் தனது முதல் பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குப் பின்னால் ஒன்பிளஸ் நிறுவனம் தனது பவர் பேங்க் சாதனங்களின் தயாரிப்பை நிறுத்திக்கொண்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ஒன்பிளஸ் நிறுவனம் மீண்டும் பவர் பேங்க் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அதுவும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் தயாராகிவிட்டது.

இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!

பவர் பேங்க்-ல் வயர்லெஸ் அம்சம் இருக்குமா?

பவர் பேங்க்-ல் வயர்லெஸ் அம்சம் இருக்குமா?

ஸ்மார்ட்போன் சந்தையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சமாக வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மாறிவிட்டது. அதேபோல், வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதே உண்மை. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய போகும் இந்த பவர் பேங்க்-ல் வயர்லெஸ் அம்சம் இருக்குமா? என்பது ஒன்பிளஸ் பயனர்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

Qi வயர்லெஸ் டெக்னாலஜி

Qi வயர்லெஸ் டெக்னாலஜி

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில், Qi வயர்லெஸ் டெக்னாலஜி எனப்படும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை முதல் முறையாக அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ஒன்பிளஸ் முன்பே வயர்லெஸ் பவர் கன்சோர்டியத்தில் உறுப்பினராகி வாங்கிவிட்டது. இதற்கிடையில், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வலைத்தளத்தில் பரவிவருகிறது.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு, ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ என்ற மூன்று ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் வேரியண்ட்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் வேரியண்ட்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் 6 ஜிபி முதல் 12 ஜிபி ரேம் வரை மற்றும் 128 ஜிபி முதல் 256 ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் மாடல் வேரியண்ட்களாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

5ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவரும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்

5ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவரும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்

இந்த ஆண்டு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இயல்புநிலையாகவே 5ஜி சேவையின் கீழ் வெளியிடப்படும். இதற்கான முக்கிய காரணம் இதில் பொருத்தப்பட்டுள்ள குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் பிராசஸர் தான்.ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் பிராசஸர் பிரத்தியேகமா 5ஜி தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 10

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 10

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும். விலை மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oneplus 8 Series Smartphone Could Launch Along Side With Oneplus Fast Charging Power Bank : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X