பொக்குனு ரூ.24,000 குறைந்த Samsung போன்.. ஒரே நேரத்தில் விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனாக வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடலுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. ஆகவே, அதிகப்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு இப்போது வாங்கி கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ,1,09,999 ஆக விலை இருந்தது. ஆகவே, ரூ.20,000 விலை குறைப்பு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. மொத்தமாக ரூ,24,000 கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Specifications): கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Dynamic AMOLED 2X) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 எம் கலர் டெப்த் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 (Corning Gorilla Glass Ceramic 2) புரொடெக்சன் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது.
இருப்பினும், 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்துள்ளது. மேலும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. கால் டிராஸ்கிரிப்ட் (Call Transcript), ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist) மற்றும் ஆடியோ எரைசர் (Audio Eraser) போன்ற கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களுடன் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. கூடுதலாக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாஜியுடன் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
10எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், ஏஐ என்ஹான்ஸ்டு ப்ரோவிசுவல் என்ஜின் (AI Enhanced ProVisual Engine) மற்றும் ஏஐ ஜூம் சொலூஷன் (AI Zoom Solution) கிடைக்கிறது. ஆகவே, ஆடியோ எரைசர் (Audio Eraser), ஆட்டோ டிரிம் (Auto Trim) உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
வெறும் 5.8 எம்எம் தடிமனுடன் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருப்பதால், 3900mAh பேட்டரியை மட்டுமே இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 163 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








