ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!

|

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் கோடக் எச்டி எல்இடி டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை தினத்தில் கோடக் மாடல் டிவிகள் ரூ.5999 என்ற விலைமுதல் விற்பனைக்கு வருகிறது.

7 எக்ஸ்ப்ரோ தொடர் டிவிகள்

7 எக்ஸ்ப்ரோ தொடர் டிவிகள்

கோடக் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 எக்ஸ்ப்ரோ தொடர் டிவிகளுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. கேமராத்துறையில் புகழ் பெற்ற விளங்கும் அமெரிக்க நிறுவனமான கோடக், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்து பண்டிகை தின விற்பனையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

பல்வேறு பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி

பல்வேறு பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி

பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கும் வகையிலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. இந்த தினங்களில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும்.

பண்டிகை தின விற்பனை

பண்டிகை தின விற்பனை

கோடக் நிறுவனம் இந்தியாவின் பண்டிகை தின விற்பனையின்போது அதன் எச்டி எல்இடி டிவியை மிகக் குறைந்த விலையில் வழங்க உள்ளது. தள்ளுபடி விலைகளின்படி கோடக்கின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7 எக்ஸ்ப்ரோ தொடர் ஸ்மார்ட்டிவிகள் ரூ.5,999 என்ற விலையில் இருந்து தொடங்குகின்றன. இதன் விற்பனை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை நடைபெறும்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு

அதேபோல் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பிளிப்கார்ட் 10% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. அதேபோல் பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு நோ காஸ்ட்(கட்டணமில்லா) இஎம்ஐ வசதியை வழங்குகிறது.

வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

ஸ்மார்ட்டிவி சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்டிவி சிறப்பம்சங்கள்

இந்த தொடரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட் டிவி ஆப்ஸ், கேம்ஸ், டால்பி விஷன், டி.டி.எஸ் உடன் 24 வாட் சரவுண்ட் சவுண்ட், ப்ளூடூத் ஸ்மார்ட் ரிமோட், ஏர்ப்ளே உள்ளமைப்புடனான க்ரோம் காஸ்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9.0 செயலி அம்சம்

ஆண்ட்ராய்டு 9.0 செயலி அம்சம்

7XPRO தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ராய்டு 9.0 செயலி அம்சத்தோடு அறிமுகமாகனது. க்வாட் கோர் ஏஆர்எம் கோர்டெக்ஸ்-ஏ53 சிபியூ, மாலி-450எம்பி3 ஜிபியூ மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது. இது 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு, 4கே மாடல் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்போடு விற்பனையில் கிடைக்கிறது.

கோடக் டிவிக்கான தள்ளுபடி விலை

கோடக் டிவிக்கான தள்ளுபடி விலை

பிளிப்கார்ட்டில் கிடைக்கும் கோடக் டிவிக்கான தள்ளுபடி விலை குறித்து பார்க்கலாம். 24 இன்ச் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்ட 24HDX900sடிவி விலை ரூ.5,999 எனவும் 32 இன்ச் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்ட 32HDX900sடிவி விலை ரூ.8,499 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் 32HDX7Xப்ரோ டிவி விலை. ரூ.10,999 எனவும் 40 இன்ச் முழு ஹெச்டி ரெசல்யூஷன் 40FHDX7Xப்ரோ டிவி விலை ரூ.15,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி ஸ்மார்ட்டிவி

55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி ஸ்மார்ட்டிவி

அதேபோல் 43FHDX7Xப்ரோ டிவி விலை ரூ.18,499 எனவும் 43UHDX7Xப்ரோ டிவி விலை ரூ.22,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி ஸ்மார்ட்டிவி விலை ரூ.28,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை

மேலும் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை தினத்தில் கோடக் டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடி விலை குறித்து பார்க்கையில், 32HDX7Xப்ரோ டிவி விலை. ரூ.10,999 எனவும் 40 இன்ச் முழு ஹெச்டி ரெசல்யூஷன் 40FHDX7Xப்ரோ டிவி விலை ரூ.15,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் 75 இன்ச் மாடலான 75CA9099 டிவி விலை ரூ.94,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kodak LED TV Available Lowest Prices During Flipkart Big Billion Days And Amazon Great Indian Festival Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X