OnePlus 9RT அறிமுக தேதி உறுதியானது.. மிஸ் பண்ணிடக்கூடாது.. இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்குமா?

|

ஒன்பிளஸ் 9 ஆர் டி வெளியீட்டு தேதி அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சீன நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. புதிய ஒன்பிளஸ் போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்தப்பட்டதாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதோடு, ஒன்பிளஸ் 9 ஆர்டியின் சில அறிக்கையிடப்பட்ட விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்த ஒன்பிளஸ் சில படங்களை வெளியிட்டுள்ளது.

OnePlus 9RT அறிமுக தேதி உறுதியானது.. மிஸ் பண்ணிடக்கூடாது..

இந்த புதிய ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமராக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நிறுவனத்தின் டி தொடரில் வேகமான செயல்திறனை வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 ஆர்டிக்கு கூடுதலாக, நிறுவனம் அடுத்த வாரம் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் 2 சாதனத்தையும் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள்..புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள்..

OnePlus 9RT வெளியீட்டு தேதி
வெய்போவில், ஒன்பிளஸ் 9 ஆர்டியின் வெளியீட்டு தேதியை அறிவிக்க ஒன்பிளஸ் டீஸரை வெளியிட்டது. வெளியீட்டு நிகழ்வு சீனாவில் அக்டோபர் 13 ஆம் தேதி அன்று மாலை 7:30 மணிக்கு CST ஆசியாவில் (மாலை 5 மணி IST) நடைபெறும். OnePlus 9RT உடன் இணைந்து, OnePlus Buds Z2 ஐ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ட்ருலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸாக அறிமுகப்படுத்தும், வெய்போவில் வெளியிடப்பட்ட டீஸர் மூலம் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தி அதன் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

OnePlus 9RT ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், இது சீன வெளியீட்டுடன் அல்லது வேறு தேதியில் நடக்குமா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. OnePlus 9RT விலை என்னவாக இருக்கும், என்ன விலையில் இந்த சாதனம் சந்தையில் களமிறங்கும் என்பதையும் டிப்ஸ்டர் தகவல் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதன் படி, OnePlus 9RT விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய ஸ்மார்ட்போன் CNY 2,000 என்ற விலையில் சீனாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 23,300 விலையில் அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல், இந்த சாதனம் CNY 3,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ. 34,900 இடையே எங்காவது கிடைக்கும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. நாங்கள் முன்பே சொன்னது போல இந்த சாதனம் முந்தைய ஒன்பிளஸ் 9 ஆர் பதிப்பின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்பதனால், அதன் அம்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..

கேமராக்களுக்கு, ஒன்பிளஸ் 9RT ஆனது 50 MP சோனி IMX766 மெயின் லென்ஸ், OIS ஆதரவுடன் 16MP சோனி IMX481 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP B&W சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இது ஒரு 16MP செல்ஃபி கேமரா சென்சாரை கொண்டிருக்கும், இது ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்படும். மேலும், இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இல் இயங்கும். இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.

மற்ற அம்சங்களில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 mAh பேட்டரி 65W சார்ஜிங் டெக் சப்போர்ட், NFC, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்அப் உடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, OnePlus 9RT சீனாவிற்குப் பிரத்தியேகமாக இருக்கும். இருப்பினும், தரமான OnePlus 9RT நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் இந்தியாவில் மலிவு விலையில் SD888-இயங்கும் ஸ்மார்ட்போனாக இது வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 9RT Launch Date Set for October 13 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X