அடுத்த ஆப்பு.. அதிக காசு கொடுத்தால் அதிக நன்மை! Elon Musk ஓபன்! ஷாக் ஆன ட்விட்டர் பயனர்கள்!

|

வேறுவழி இல்லை, ப்ளூ சந்தா செலுத்தி தான் ஆக வேண்டும் என ட்விட்டர் பயனர்கள் தயாராகி வரும் நேரத்தில் எலான் மஸ்க் அடுத்த அறிவிப்பை சூசகமாக வெளியிட்டிருக்கிறார். அது ட்விட்டரில் தோன்றும் விளம்பரங்கள் தொடர்பான அறிவிப்பு ஆகும். ட்வீட்டின் மூலம் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

எலான் மஸ்க் ட்வீட்

எலான் மஸ்க் ட்வீட்

எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் Ads are too frequent on Twitter and too big என குறிப்பிட்டிருந்தார். அதாவது ட்விட்டரில் விளம்ரங்கள் அடிக்கடி வருகிறது எனவும் அது நீளமாகவும் இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த இரண்டு சிக்கலை தீர்க்க அடுத்த சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

புதிய நடவடிக்கை விரைவில்

சரி, மஸ்க் இப்படி செய்வது நல்லது தானே என தோன்றலாம். ஆனால் அதுதான் இல்லை. ட்விட்டர் வருவாயில் கிட்டத்தட்ட 90 சதவீதம் விளம்பரங்களை பெறுவதன் மூலமாக தான் கிடைக்கிறது. ஏற்கனவே வருவாயில் வீழ்ச்சியை சந்தித்து வரும் மஸ்க், ட்விட்டரில் விளம்பரங்களை குறைத்தால் அவரது வருவாயில் இன்னும் பாதிப்பு ஏற்படுத்தும் தானே. சரிதான், இதை நன்கு அறிந்த மஸ்க் புதிய நடவடிக்கை ஒன்றில் களமிறங்க இருக்கிறார்.

விளம்பரங்கள் இல்லா சந்தா திட்டம்

விளம்பரங்கள் இல்லா சந்தா திட்டம்

அதாவது ட்விட்டரை விளம்பரங்கள் இன்றி அணுகும் வகையிலான புதிய சந்தா திட்டத்தை மஸ்க் விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரி, முன்னதாகவே ப்ளூ டிக் சந்தா சேவை ஒன்று இருக்கிறதே என தோன்றலாம். இங்கே தான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது.

கூடுதல் பணம் செலுத்தினால் கூடுதல் நன்மை

கூடுதல் பணம் செலுத்தினால் கூடுதல் நன்மை

ப்ளூ டிக் சந்தா கட்டணம் செலுத்தினாலும் விளம்பரங்கள் வரும் என கூறப்படுகிறது. ஆனால் பிற சாதாரண பயனர்களுடன் ஒப்பிடும் போது பாதி விளம்பரங்கள் ப்ளூ டிக் சந்தா பயனர்களுக்கு தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது.

விளம்ரங்கள் இல்லாமல் ட்விட்டரை பயன்படுத்துவதற்கு தனியாக ஒரு சந்தாத் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டங்களுக்கான பிளான்கள் 2023க்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் மஸ்க்

தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் மஸ்க்

எலான் மஸ்க் சமீபகாலமாக பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். டெஸ்லா பங்கு வீழ்ச்சி, சொத்து மதிப்பு வீழ்ச்சி, ட்வீட்டரை வாங்கிய பின் அவருக்கு சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பிற நிறுவனங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் என பல நெருக்கடிகளை மஸ்க் சந்தித்து வருகிறார்.

இதை சரி செய்வதற்கு என ப்ளூ சந்தா சேவை, செலவுகளை குறைக்க ஊழியர்கள் பணி நீக்கம் என தொடர்ந்து மறுபுறம் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா சேவை

ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா சேவை

எலான் மஸ்க் முன்னதாகவே ட்விட்டர் ப்ளூ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை உறுதி செய்தார். அதன்படி பல்வேறு முயற்சிகளுக்கு பின் இந்த ப்ளூ சந்தா சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண சேவையானது வேகமாக பல நாடுகளில் விரிவடைந்து வருகிறது. ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா கட்டணம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வேறுவேறு மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நகரங்களில் இந்த கட்டணம் இரண்டு பயனர்களுக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விலை

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விலை

முன்னதாக ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த ப்ளூடிக் சேவை தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக் கட்டணம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு $11 (தோராயமாக ரூ.900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே எதிர்பார்த்தது போல் இந்த கட்டண சேவையின் விலை ஆனது ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

தற்போதைய நிலைப்படி ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை ஆனது UK, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. ப்ளூ சந்தா கிடைக்கும் நாடுகளின் பட்டியல் வேகமாக விரிவடைந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள யாரும் வருத்தப்பட வேண்டாம். காரணம் இன்னும் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை இந்தியாவில் தொடங்கப்படவில்லை. ஆனால் நீண்ட காலத்திற்கு இதே நிலை நீடிக்காது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
More Money You Pay, More Benefits You Get: Elon Musk Going to brings a new Subscribe Plans to Twitter

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X