சூப்பர் மொபைல் பாதுகாப்பிற்கு மேட் இன் இந்தியா BharOS.! இனி Android, iOS ஓடிடனும்.!

|

மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Mobile Operating System) என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனை சரியாக இயக்கவும், அதை சரியான கட்டுப்பாட்டில், பாதுகாப்பாக வைக்கவும், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் (OS) தான் மிகவும் முக்கியமானவை.

இப்பொழுது உலக அளவில் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் தான் மிகவும் பாதுகாப்பானவை என்று கருதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக iPhone-ன் iOS ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் மிகவும் பாதுகாப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று நம்பப்படுகிறது.

சூப்பர் மொபைல் பாதுகாப்பிற்கு மேட் இன் இந்தியா BharOS!

இப்படி அயல் நாட்டில் உருவாக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம்புவதைத் தவிர்த்து, இந்தியா தனக்கென்று சொந்தமாக ஒரு புதிய பாதுகாப்பு ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. அதுதான் பார்ஓஎஸ் (BharOS) ஆகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாதுகாப்பான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Indian Institute of Technology) - ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) உருவாக்கியுள்ளது.

இந்த ஓஎஸ் (OS) ஐ இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள், அவர்களுடைய சாதனங்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய BharOS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்தியா மிகவும் கடுமையான தனி உரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகள் கொண்ட நிறுவனங்களுக்கும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளது.

முக்கியமான தகவல்களை கையாளும் பயனர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது என்று அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. BharOS என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.

இது பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அதேபோல், பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள ரகசியங்கள் வெளியில் கசியாமலும் இந்த ஓஎஸ் பார்த்துக் கொள்கிறதாம். ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற மொபைல் ஆப்ஸ்களை தேர்வு செய்து பயன்படுத்தவும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனுமதிக்கிறது.

சூப்பர் மொபைல் பாதுகாப்பிற்கு மேட் இன் இந்தியா BharOS!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்றப் போவதாக ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், இந்த BharOS நோ டிஃபால்ட் ஆப்ஸ் (No Default Apps - NDA) உடன் வருகிறது.

இது பயனர்கள் தங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட ஆப்ஸ்கள் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல், சாதனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நேட்டிவ் ஓவர் தி ஏர் (NOTA) அப்டேட்களையும் BharOS வழங்குகிறது. பார்ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பாக இயங்கக்கூடிய மொபைல் ஆப்ஸ்களுக்கென்று தனியாக ஒரு பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ் (PASS) அம்சத்தை இந்தக் குழு வழங்குகிறது.

இதன் மூலம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனி உரிமை தரங்களைப் பூர்த்தி செய்த மொபைல் ஆப்ஸ்களுக்கு மட்டுமே இங்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து டவுன்லோடு செய்யப்படும் ஆப்ஸ்களால் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மூன்றாம் நபர்கள் யாரும் உங்கள் போனின் தகவல்களை கண்காணிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் - உங்கள் மொபைலில் உள்ள மொபைல் ஆப்ஸ்களுக்கு தேவையான அப்டேட்களை தானாகவே பதிவிறக்கம் செய்துகொள்கிறது. இதனால், உங்கள் சாதனம் அன்றைய தேதிக்கு ஏற்றார் போல, மிகச் சரியான அப்டேட் உடன் தரமான மேம்படுத்தலுடன் பாதுகாப்பாகச் செயல்படுகிறது.

இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கப்பட்ட இந்த பார் ஓ எஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பற்றிய உங்கள் கருத்தை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Made-In-India Smartphone Operating Software BharOS and Its Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X