மார்க்கெட்டே அதிர போகுது.. 200எம்பி கேமரா.. Dimensity சிப்செட்.. வருகிறது புதிய Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.
ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Oppo Reno 16 Pro Max Specifications): 6.78-இன்ச் 1.5கே எல்டிபிஒ பிளாட் டிஸ்பிளே உடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டைமன்சிட்டி என்-1பிளாக்ஷிப் சிப்செட் உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 (MediaTek Dimensity 9400) போன்ற சிப்செட் வசதி இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும்.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மறறும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் புதிய ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் போன் வெளிவரும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. குறிப்பாக ஒப்போ ரெனோ 16 ப்ரோ மேக்ஸ் போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








