என்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்!

By Keerthi
|

இந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான்.

ஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது.

2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள். $110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள்.

உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர்.

வளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள்.

2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பொறியியலில் எந்த பிரிவாயிருந்தாலும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் வேலைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள்.

அந்த நிலை மாறி, இப்போது பல கல்லூரிகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மட்டும்தான் நேர்முகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

மொத்த மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அமிட்டி கல்லூரியின் டில்லி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது.
வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது.
சேரும் தேதி கேட்டு போராட்டம்.

இதோ அதை பற்றி ஒரு சிறப்பு பார்வை பார்ப்போம்.....

Click Here For New Latest Gadgets Gallery

 பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

கூடவே, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு எடுப்பதாக வாக்கு கொடுக்கும் மாணவர்கள் சேரும் தேதியை நிறுவனங்கள் தாமதப்படுத்துகின்றன. சேரும் தேதிகள் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து 6 மாதம் முதல் ஆண்டு கணக்கில் கூட தள்ளிப் போடப்படுகின்றன.

 பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள், தமது வளர்ச்சி மற்றும் லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்களில் பலரை திறமை சரியில்லை, சரியாக வேலை செய்வதில்லை என்று பொய்யான காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கிக் கொண்டிருக்கின்றன.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

புதிதாக வரும் பட்டதாரிகளோடு, கடந்த ஆண்டுகளில் வேலை கிடைக்காதவர்கள், நிறுவனங்களிலிருந்து கழற்றி விடப்படுபவர்கள் என்று லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலைக்காக நிறுவனங்களை மொய்க்கிறார்கள்.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

வேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மென்பொருள் ஊழியர்களின் சமூக அந்தஸ்தை பாதித்திருக்கிறது. உதாரணமாக திருமண பொருத்தம் பார்க்கும் இணைய தளத்தில் ஐடி ஊழியர்கள் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

ஐடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள், அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

வேலை கிடைக்காமல், கடன் சுமையை சமாளிக்க முடியாமல் ஒரு சிலர் கிரிமினல் வேலைகளில் இறங்குகின்றனர்.

மும்பையின் தானே புறநகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்ற சிவில் எஞ்சினியர் தனது குடும்ப செலவுகளை சமாளிக்க செயின் அறுத்தலில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது.

 பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

முதலாளித்துவ நிபுணர்கள் ‘பட்டதாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம், தரம் சரியில்லை, சந்தைக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேல் படிப்பு படிக்க வேண்டும்' என்று இதற்கு தீர்வுகள் சொல்கிறார்கள்.

 பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

ஏற்கனவே நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க தயாராகிக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பிறகும் குறைவான எண்ணிக்கையில்தான் ஆள் எடுப்பார்களாம்.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கு, என்ன படிப்பு தேவை, எத்தனை எஞ்சினியர்கள் தேவை, எத்தனை மேலாண்மை ஊழியர்கள் தேவை என்று திட்டமிடாமல், முதலாளித்துவ சந்தைக்கு தேவையான கல்வி, கல்லூரிகளை புற்றீசல் போல ஆரம்பித்து, மந்தைகளைப் போல மாணவர்களை உபரியாக இறக்கி, வேலையற்ற பட்டாளத்தை வைத்துக் கொண்டு மலிவான ஊதியத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கிறது தனியார் மயம்.

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

பொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்!

எனவே இனியாவது என்ஜினியரிங் சேர போனால் யோசிச்சு போங்க பாஸ்.

Click Here For New Mobile Phones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X