கொளுத்தும் வெயில்.. இனி கவலை வேண்டாம்.. ரூ.5000க்கு கீழ் தரமான ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..
கடந்த சில நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும் சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியிருக்கிறது. இந்நிலையில் ஏர் கூலர் மாடல்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்த பதிவில் ரூ.5000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களைப் (Best air coolers) பார்க்கலாம்.
1.பஜாஜ் PX25 Torque பெர்சனல் ஏர் கூலர் (Bajaj PX25 Torque Personal Air Cooler) அமேசானில் ரூ.4799 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 3 ஸ்பீடு கண்ட்ரோல், இன்வெர்ட்டர் இணக்கமானது, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 24 லிட்டர் வாட்டர் டேங்க், டர்போ ஃபேன் டெக்னாலஜி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பஜாஜ் ஏர் கூலர் மாடலில் உள்ளன.

2.ஆர்ஆர் 40எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (RR 40 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 1400M3/hr ஏர் டெலிவரி, 3 ஸ்பீடு செட்டிங்ஸ், 40 லிட்டர் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஆர்ஆர் ஏர் கூலர் மாடலில் உள்ளன.
3. கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Kenstar 45 L Room/Personal Air Cooler) பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதகத்தை வாங்கினால் ரூ.550 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.4949 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த ஏர் கூலர் மாடலை ரூ.4949 விலையில் வாங்கிவிட முடியும்.
45 லிட்டர் வாட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது கென்ஸ்டார் 45 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர். மேலும் 2200 m³/hr ஏர் டெலிவரி கொடுக்கும். அதேபோல் தேன்கூடு பட்டைகள் (honeycomb pads), 12 இன்ச் பவர்ஃபுல் பேன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடல் வெளிவந்துள்ளது.
4.ஹவேல்ஸ் Kalt 24L பெர்சனல் ஏர் கூலர் (Havells Kalt 24L Personal Air Cooler) மாடல் அமேசான் தளத்தில் ரூ.4799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஹனிகோம்ப் பேட் (honeycomb pads), 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 800 m3/hr cfm ஏர் டெலிவரி, 24 லிட்டர் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
5.Hindware 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.550 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏர் கூலர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

6.சிம்பொனி 27எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Symphony 27 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5491 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.550 தள்ளுபடியும் உள்னது. எனவே இந்த சாதனத்தை ரூ.4941 விலையில் வாங்கிவிட முடியும்.
27 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி(Tank Capacity), தேன்கூடு பட்டைகள் (honeycomb pads), 3 ஸ்பீடு கண்ட்ரோல், ஸ்விங்க் மோட், கூலிங் மோட், பவர்ஃபுல் பேன் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த அசத்தலான சிம்பொனி 27எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடல் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications








