Home
Gadgets

சுட்டெரிக்கும் வெயில்.. சரியான நேரத்தில் ஏசிகளுக்கு நம்ப முடியாத ஆஃபர் போட்ட அமேசான்.. இதோ பட்டியல்..

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் இருந்தே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கி விட்டது. அதுவும் தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் போன்ற சாதங்களுக்கு ஆஃபர்களை வழங்க தொடங்கிவிட்டது அமேசான்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது அமேசான் தளத்தில் electronic premier league sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஏசி மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த பதிவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஏசி மாடல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் வெயில்.. ஏசிகளுக்கு  நம்ப முடியாத ஆஃபர் போட்ட அமேசான்!

1.கோத்ரெஜ் (Godrej) 1 டன் 3 ஸ்டார் ஏசி மாடல் முன்பு ரூ.41,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த ஏசி மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.26,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கோத்ரெஜ் ஏசி மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது.

5-இன்-1 கன்வெர்ட்டிபிள் கூலிங், இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, ஹெவி டியூட்டி கூலிங், ஐ-சென்ஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் கோத்ரெஜ் 1 டன் 3 ஸ்டார் ஏசி மாடல் வெளிவந்தது. மேலும் இந்த ஏசி மாடலுக்கு 5 வருட வாரண்டி கிடைக்கும் என்று கோத்ரெஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.க்ரூஸ் 1 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Cruise 1 Ton 3 Star Inverter Split AC) மாடலுக்கு அமேசானில் 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,940 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. 7-ஸ்டேஜ் ஏர் ஃபில்ட்ரேஷன், கன்வெர்ட்டிபிள் 4-இன்-1, 100 சதவீதம் ஹை க்ரூவ்டு காப்பர் கண்டன்சர், எல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஏசி மாடலில் உள்ளன.

சுட்டெரிக்கும் வெயில்.. ஏசிகளுக்கு  நம்ப முடியாத ஆஃபர் போட்ட அமேசான்!

3.வேர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் (Whirlpool 1.5 Ton 3 Star) ஏசி மாடல் முன்பு ரூ.62,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் இந்த ஏசி மாடலுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.29,240 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த வேர்ல்பூல் எசி மாடலுக்கு ரூ.500 கூப்பன் சலுகையும் உள்ளது.

மேஜிகூல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி வசதி, 4 கூலிங் மோட், எச்டி ஃபில்டர், டர்போ கூல், ரிமோட் கண்ட்ரோல் ஆதரவு உள்ளிட் பல சிறப்பான வசதிகள் வேர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் ஏசி மாடலில் உள்ளன.

4. எல்ஜி எசென்ஷியல் சீரிஸ் 0.8 டன் 2 ஸ்டார் (LG Essential Series 0.8 Ton 2 Star) ஏசி மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினர் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஸ்மார்ட் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, ஃபாஸ்டர் கூலிங், எனர்ஜி சேவிங், ஆன்டிவைரஸ் பாதுகாப்பு, எச்டி ஃபில்டர் போன்ற பல வசதிகள் இந்த எல்ஜி எசி மாடலில் உள்ளன.

5.Midea 1 டன் 3 ஸ்டார் வைஃபை ஏஐ இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி மாடலுக்கு 46 சதவீம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27.490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஏசி மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. கன்வெர்ட்டிபிள் 6-இன்-1, டர்போ மோட், ஆட்டோ ஃபேன் ஸ்பீட், ஆட்டோ கிளீன், ரெஃப்ரிஜிரன்ட் லீக்கேஜ் டிடெக்டர், ஆட்டோ ஸ்விங் போன்ற வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

6.பானாசோனிக் 1.0 டன் 5 ஸ்டார் பிரீமியம் (Panasonic 1.0 Ton 5 Star Premium) ஏசி மாடல் முன்பு ரூ.55,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் சிறப்பு விற்பனையில் இந்த ஏசி மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏஐ, டஸ்ட்பஸ்டர், இன்வெர்ட்டர் ஸ்மார்ட் ஸ்பிளிட் ஏசி, 8 இன் 1 கன்வெர்ட்டிபிள் உள்ளிட்ட பல வசதிகள் இந்த பானாசோனிக் ஏசி மாடலில் உள்ளன.

சுட்டெரிக்கும் வெயில்.. ஏசிகளுக்கு  நம்ப முடியாத ஆஃபர் போட்ட அமேசான்!

7.Lloyd 1.5 டன் 3 ஸ்டார் ஏசி மாடலுக்கு அமேசானில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 7 AC Available at Discount in Amazon Electronics Premier League Sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X