இனி 5000mAh பேட்டரி கதை முடிந்தது.. ரூ.15,000-க்கு கீழ் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..
இந்தியாவில் 5000mAh பேட்டரி மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை விட 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கத் தான் தற்போது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்த பதிவில் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 7000எம்ஏஎச் பேட்டரி கொண்ட 5ஜி போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
1.ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (realme NARZO 90x 5G) ஸ்மார்ட்போன் தற்போது ரூ13.749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 50எம்பி சோனி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ஐபி65 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

2.மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி (Motorola G57 Power 5G) ஸ்மார்ட்போன் இப்போது ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 7000எம்ஏஎச் பேட்டரி, 30W சார்ஜிங், டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட், 50எம்பி சோனி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.72-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி போனில் உள்ளன.
3.போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) ஸ்மார்ட்போன் இப்போது ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி64 ரேட்டிங், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC), ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.
4.ரியில்மி சி83 5ஜி (realme C83 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் டைமன்சிட்டி 6300 சிப்செட், 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 6.8-இன்ச் டிஸ்பிளே, ஐபி64 ரேட்டிங், 7000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
5.ரெட்மி 15 5ஜி (REDMI 15 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,938 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1510 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 7000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா உடன் இந்த ரெட்மி 5ஜி போன் வெளிவந்துள்ளது.

6.மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset), 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டூயல் மைக்ரோ போன்கள், IP64 ரேட்டிங், 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








