Home
News

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. 1 ஜிபி-க்கு ரூ.1 வரி.. மொபைல் டேட்டாவிற்கு தனி வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை..

இந்தியாவில் முழுவதும் அதிக மக்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு வேலைகளை இன்டர்நெட் மூலம் மிக சுலபமாகச் செய்ய முடிகிறது. இந்நிலையில் இந்தியாவில் மொபைல் டேட்டா (mobile data) பயன்படுத்துவதற்குத் தனியாக வரிவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறைக்குச் செப்டம்பர் மாதம்வரை கால அவகாசம் அளித்துள்ளது. குறிப்பாக கூடுதல் வருவாய் ஈட்ட மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் திரை நோக்கத்தைக் குறைப்பது இது முக்கிய நோக்கங்கள் என்று கூறப்படுகிறது.

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. 1 ஜிபி-க்கு ரூ.1 வரி..

அதுவும் 1ஜிபி டேட்டாவிற்கு ரூ.1 வரி விதிக்கப்பட்டால் கூட, அரசுக்கு சுமார் ரூ.22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய வரி அமலுக்கு வந்தால் இணையப் பயன்பாட்டுச் செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் இது டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் மொபைல் இணையத்தின் வளர்ச்சிக்கு மலிவு விலையில் கிடைக்கும் டேட்டாவே காரணம் ஆகும். எனவே இந்த டேட்டாவிற்கு வரி விதிக்கப்பட்டால் அது பொருளாதார வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய சலுகை

மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஹோலி (Holi) பண்டிகையை முன்னிட்டு கூடுதல் வேலிடிட்டி சலுகையை வழங்கியது. அதுவும் இந்த கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது வரும் மார்ச் 31-வரை மட்டுமே இருக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.997 prepaid plan) முன்பு 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் இப்போது ஹோலி (Holi) பண்டிகையை முன்னிட்டு இந்த திட்டத்தில் 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 164 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே நீங்கள் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 328ஜிபி டேட்டாவை பெறமுடியும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. 1 ஜிபி-க்கு ரூ.1 வரி..

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

தற்போது நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி சேவையை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Central Government Considers Rs.1 Tax Per GB on Mobile Data: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X